fbpx

”இன்னும் கொஞ்ச நேரம் ஆகிருந்தா அவ்வளவு தான்”..!! ரயில் நிலையத்தில் பயங்கர குண்டுவெடிப்பு..!! 20 பேர் உயிரிழப்பு..!!

பாகிஸ்தானில் உள்ள குவெட்டா ரயில் நிலையத்தில் இன்று காலை பயங்கர குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. இந்த குண்டு வெடிப்பில் சுமார் 20 பேர் உயிரிழந்தனர். மேலும், 30 பேர் காயம் அடைந்தனர். ரயில் ஒன்று நடைமேடைக்கு வருவதற்கு சற்று முன்னதாக புக்கிங் ஆபிஸ் அருகே இந்த குண்டு வெடிப்பு சம்பவம் நடந்ததாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.

பெஷாவரில் இருந்து ஜாஃபர் எக்ஸ்பிரஸ் சரியாக 9 மணிக்கு வர இருந்தது. ரயில் வந்திருந்தால் பலி எண்ணிக்கை மிகப்பெரிய அளவில் அதிகரித்திருக்கும் என கூறப்படுகிறது. ரயில் நிலையத்தில் கூட்டம் அதிகமாக காணப்பட்டதால் 20-க்கும் மேற்பட்டோர் இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர்.

வித்து குறித்து தகவலறிந்த மீட்பு மற்றும் பாதுகாப்புக் குழுக்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து, உடல்கள் மற்றும் காயமடைந்தவர்களை மீட்டு குவெட்டாவில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். டிக்கெட் பூத் அருகே வெடிப்பு ஏற்பட்டபோது, ​​இரண்டு ரயில்கள் புறப்பட இருந்ததாகவும், ஏராளமான பயணிகள் நடைமேடையில் இருந்ததாகவும் ரயில்வே அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

மருத்துவமனைகளில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நிலையில், குண்டுவெடிப்பின் தன்மை குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சேதங்கள் குறித்தும் மதிப்பிடப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. சமீபகாலமாக பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் தீவிரவாத தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. இது தவிர அங்கு பிரிவினைவாத கிளர்ச்சியும் அதிகரித்து வருகிறது.

Read More : அதிரடியாக குறைந்த தங்கம் விலை..!! இன்றைய விலை நிலவரம்..!! அதிர்ச்சியில் நகைப்பிரியர்கள்..!!

English Summary

There was a terrible blast at the Quetta railway station in Pakistan this morning.

Chella

Next Post

”எங்க வந்து யார்கிட்ட சீன் போடுற”..!! கள்ளக்காதலிக்காக காவல்நிலையத்தில் அட்ராசிட்டி செய்த காவலர்..!! தட்டித் தூக்கிய போலீஸ்..!!

Sat Nov 9 , 2024
He quarreled with Assistant Inspector Chandran and Head Constable Ramachandran and used inappropriate words.

You May Like