fbpx

ஏசி ஓடினால் கரண்ட் பில் அதிகம் வருகிறதா..? இதுதான் காரணம்..!! இனிமே இந்த தவறை செய்யாதீங்க..!!

கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில், அதிக வெப்பம் காரணமாக பெரும்பாலானவர்கள் தங்களுடைய வீடுகளில் ஏசியை பயன்படுத்துகின்றனர். இரவு முழுவதும் ஏசியை ஆன் செய்தவாறு தூங்குவதால் மின்சார கட்டணம் அதிகமாக வருகிறது. இந்நிலையில், ஏசியை பயன்படுத்தும் போது மின்சார கட்டணத்தை எப்படி சேமிக்கலாம் என்பது குறித்த சில வழிமுறைகளை இங்கு பார்க்கலாம். ‌ ஏசியை குறைந்த வெப்ப நிலையில் வைத்திருக்கக் கூடாது. மனிதனின் உடலுக்கு உகந்த குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி. எனவே, ஏசியை 24 டிகிரி வெப்பநிலையில் வைத்திருப்பது நல்லது.

கோடை காலத்திற்கு முந்தைய குளிர்காலத்தில் நீங்கள் ஏசியை பயன்படுத்தாமல் வைத்திருக்கலாம். அப்படியே பயன்படுத்தாமல் வைத்திருந்தால் அதில் தூசி மற்றும் துகள்கள் சேர்ந்திருக்கும். அந்த நேரத்தில் குளிர்ச்சியை தருவதற்கு மெஷின் நிறைய நேரம் வேலை செய்ய வேண்டியிருக்கும். எனவே, ஏசியை ஒருமுறை சர்வீஸ் செய்வது நல்லது. ஏசியை ஆன் செய்வதற்கு முன்பாக அந்த அறையின் கதவு மற்றும் ஜன்னல் போன்றவற்றை மூடிவிட வேண்டும். ஒருவேளை மூடாவிட்டால் குளிர்ச்சியை தருவதற்கு ஏசி அதிகமாக செயல்பட வேண்டி இருக்கும்.

இதனால், கரண்ட் பில் அதிகமாக வாய்ப்பிருக்கிறது. எனவே, ஜன்னல் மற்றும் கதவுகளை மூடிவிட்டு ஏசியை ஆன் செய்ய வேண்டும். தற்போது பெரும்பாலான ஏசிகள் ஸ்லீப் மோடு அம்சத்தில் வருவதால் அவை தானாகவே ஈரப்பதம் மற்றும் வெப்பநிலையை சரி செய்து கொள்ளும். இதனால் 36 சதவீதம் வரை கரண்ட் பில் மிச்சமாகும். நீங்கள் ஏசியுடன் சேர்ந்து மின்விசிறியை பயன்படுத்தினால் ஏசி காற்றை மின்விசிறி அறையின் மூலை முடுக்குக்கெல்லாம் கொண்டு செல்லும். இதனால் ஏசியின் வெப்பநிலையை குறைக்க வேண்டியது ஏற்படாமல் மின்சாரம் மிச்சமாகும்.

Chella

Next Post

’அடிக்கிற வெயிலுக்கு இந்த பழங்களை மட்டும் ஃபிரிட்ஜில் வைக்காதீங்க’..!! ’மீறினால் ஃபுட் பாய்சன் தான்’..!!

Mon Apr 24 , 2023
கோடை காலத்தில் எந்த உணவாக இருந்தாலும் சீக்கிரமே கெட்டுவிடும். ஆகையால், அளவாக சமைத்து பிரெஷாக சாப்பிடுவதே சிறந்தது. இதில் உணவுகள் மட்டுமல்ல பழங்கள், காய்கறிகள் கூட வெளியே வைத்தால் கெட்டுவிடும். இதுபோன்ற காரணங்களால்தான் கோடையில் ஃபிரிட்ஜின் தேவை அதிகமாக இருக்கிறது. இதற்காக எதை வேண்டுமென்றாலும் ஃபிரிட்ஜில் வைத்துவிடலாம் என்கிற எண்ணமும் தவறு. சில பழங்களை ஃபிரிட்ஜில் வைத்து சாப்பிட்டால் அவை விஷமாக கூட மாறும். அந்த வகையில், கோடைக்காலத்தில் ஃபிரிட்ஜில் […]

You May Like