கள்ளக்குறிச்சி மாணவியின் உடற் கூறாய்வு அறிக்கைகளை புதுச்சேரி ஜிப்மர் மருத்துவ குழு ஆய்வு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது..
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே பிளஸ் 2 மாணவி ஸ்ரீமதி, கடந்த 13-ம் தேதி தனியார் பள்ளி விடுதியின் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது.. இதனிடையே மாணவியின் மரணத்தில் உள்ள உண்மை கண்டறிய வேண்டும், மீண்டும் மறு பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்று தந்தை ராமலிங்கம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.. இந்த வழக்கில் மாணவியின் உடலை மறு பிரேத பரிசோதனை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது.. எனினும் தங்கல் தரப்பு மருத்துவரை சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க நீதிபதி சதீஷ்குமார் மறுத்துவிட்டார்.
இதையடுத்து மாணவி உடல் மறு பிரதே பரிசோதனை செய்யப்பட்டது.. ஆனால் அதன் பிறகும் மாணவியின் உடலை பெற்றுக் கொள்ள பெற்றோர் மறுத்து வருகின்றனர்.. இந்நிலையில் மாணவியின் பெற்றோர், உடலை பெற்றுக்கொள்ள மறுத்து வருவதாக காவல்துறை தரப்பு உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்தது.. இந்த வழக்கு இன்று உயர்நீதிமன்றத்தில் நீதிபதி சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது..
அப்போது கள்ளக்குறிச்சி மாணவியின் உடற் கூறாய்வு அறிக்கைகளை புதுச்சேரி ஜிப்மர் மருத்துவ குழு ஆய்வு செய்ய நீதிபதி உத்தரவிட்டார்.. மேலும் மாணவியின் உடலை பெற்றுக் கொள்ள பெற்றோருக்கு அறிவுறுத்தி உள்ளார். பிரேத பரிசோதனையின் போது எடுக்கப்பட்ட வீடியோவை ஜிப்மரில் தாக்கல் செய்யவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்..
மேலும் மாணவி உயிரிழந்த விவகாரத்தில் சமூக ஊடகங்களில் பொய்யான தகவல்களை பரப்பி உள்ளனர் என்றும், மாணவி மரணத்தில் பெற்றோருக்கு தெரியாமலே வேறு சிலர் ஆதாயம் தேடுவதாகவும் நீதிபதி தெரிவித்தார்.. மாணவியின் உடலுக்கு கண்ணியமான முறையில் இறுதி சடங்குகளை நடத்துங்கள் மகளின் ஆன்மா இளைப்பாறட்டும் என்றும் நீதிபதி தெரிவித்தார்.. மேலும் நாளை நண்பகல் 11 மணிக்குள் பெற்றுக்கொள்ள வேண்டும் மாணவியின் தந்தை தரப்புக்கு அறிவுறுத்தினார். மேலும் மகளின் உடலை நாளைக்குள் பெற்றுக்கொள்ளவில்லை எனில், காவல்துறை சட்டப்படி நடவடிக்கை எடுக்கும் என்று தெரிவித்தார்..