fbpx

உயில் எழுதாத தந்தையின் சொத்தில் மகளுக்கு உரிமை உண்டா? சட்டம் சொல்வது என்ன?

சம்பாதித்த சொத்துக்களை உயிலாக எழுதி வைப்பார்கள்.. ஆனால், பூர்வீக சொத்துக்களை உயிலாக எழுதி வைக்க முடியுமா? அப்பா உயில் எழுதி வைக்காத பட்சத்தில், மகளுக்கும் சொத்தில் உரிமை உண்டா? சட்டம் சொல்வது என்ன?

உயில் பத்திரம் :

ஒருவர் தன்னுடைய சொத்துக்களை தன்னுடைய வாழ்நாளுக்கு பிறகு, தன்னுடைய உறவினர்களுக்கு சேரும்படி எழுதி வைக்கும் பத்திரமே “உயில் பத்திரம்” ஆகும்.. இது முழுக்க முழுக்க சுயநினைவுடன் மட்டுமே எழுத முடியும்.. அதுவும் தான் சுயமாக சொந்தமாக சம்பாதித்ததை, சொத்துக்களை மட்டுமே உயிலாக எழுதி வைப்பதாகும்.

பூர்வீக சொத்தாக இருந்தாலும் அதை யாருக்கும் உயிலாக எழுத முடியாது, பிரித்து எழுதி வைக்கவும் முடியாது. அம்மா, பாட்டி, மாமா, சகோதரன் ஆகியோரிடமிருந்து பெறப்பட்ட சொத்துக்களை மூதாதையர் சொத்தாக கருத முடியாது. தாத்தா, பாட்டி இருந்தாலும்கூட, இந்த சொத்துக்களை பிரித்து வாரிசுகளுக்கு தர முடியாது.

பெண்களுக்கு உரிமை உண்டா?

இந்து வாரிசுரிமை சட்டம் 2005இன் படி அப்பா சுயமாக சம்பாதித்த சொத்தில் மகனுக்கு என்ன உரிமை இருக்கிறதோ அதேபோல மகளுக்கும் உரிமை இருக்கிறது. திருமணம் ஆனாலும், ஆகவில்லை என்றாலும் இந்தச் சட்டம் பொருந்தும். அப்பா உயில் எழுதாத பட்சத்தில், கிளாஸ் 1 சட்டப்பூர்வமான வாரிசுகள் என்று கருதப்படும் நேரடி வாரிசுகளுக்கு (குழந்தைகள்) பாலின வேறுபாடின்றி, அப்பாவின் சுய சம்பாத்தியத்தில் சம பங்கு உள்ளது.

ஆனால் ஒருவேளை திருமணமான பெண்ணின் அப்பா தான் சுயமாக சம்பாதித்த சொத்தை வேறு யாருக்காவது உயில் எழுதி வைத்திருந்தால் அதில் பங்கு கேட்க முடியாது. சுய சம்பாத்தியம் இல்லாமல் பூர்வீக சொத்தாக இருந்தால் அதில் அனைவருக்கும் சமமான பங்கு உள்ளது. பொதுவாகவே சுயமாக சம்பாத்தியம் இருக்கும் அப்பாக்கள் தன்னுடைய காலத்திற்குப் பிறகு பிள்ளைகள் இடையே சொத்து பிரச்சனை ஏற்படாமல் இருப்பதற்கு உயில் எழுதும் வழக்கம் இருந்து வருகிறது.

எனவே உயிரோடு இருக்கும் காலத்திலேயே யாருக்கு எவ்வளவு சொத்து என்பதை தெளிவாக குறிப்பிட்டு உயில் எழுதுவது பலவிதங்களில் சௌகரியமாக இருக்கும். அதே நேரத்தில் ஒரு சிலர் உயிருடன் இருக்கும்போதே தன்னுடைய சொத்துக்களை பரிசாக வாரிசுகளுக்கு வழங்கவும் விருப்பப்படுவார்கள். குறிப்பாக திருமணமான பெண்கள் இருந்தால் பெண்ணுக்கு சென்று வீடு, நிலம், ரொக்கம், நகை உள்ளிட்டவற்றை உயிருடன் இருக்கும்போது அம்மாக்கள் பரிசாக கொடுக்க விரும்புவார்கள்.

உதாரணமாக ஒரு நபர் சுயமாக சம்பாதித்த இரண்டு வீடுகள் இருக்கின்றன. அவருக்கு இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள். இருவரும் வசதியாக, நல்ல வருமானம் ஈட்டி வருகிறார்கள். ஆளுக்கு ஒரு வீடு என்று தனது பிள்ளைகளுக்கு அந்த நபர் கொடுக்க விரும்புகிறார். ஆனால் ஒரு வீட்டில் அவர் வசித்து வருகிறார். எனவே, உயிருடன் இருக்கும் காலம் வரை அவரே அந்த வீடுகளின் உரிமையாளராக இருந்து, அவருடைய காலத்துக்கு பிறகு அந்த வீடுகள் பிள்ளைகளுக்கு செல்லும் படி உயில் எழுதி வைக்கலாம்.

விவாகரத்தான ஒரு பெண் தன்னுடைய மகனுக்கு தன்னுடைய முன்னாள் கணவரின் பூர்வீக சொத்தில் பங்கு இருக்கிறதா என்ற கேள்வி எழுப்பியிருக்கிறார். வாரிசு உரிமை சட்டத்தின்படி பூர்வீக சொத்தில் அனைத்து நேரடி வாரிசுகளுக்குமே பங்கிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதில் விவாகரத்து ஆகி இருந்தாலும், முன்னாள் கணவர் மற்றொரு பெண்ணை மணந்து அவருக்கு குழந்தைகள் இருந்தாலுமே, இந்தப் பெண்ணின் மகனுக்கு பூர்வீக சொத்தில் உரிமை இருக்கிறது.

Read more ; #Breaking: தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டிற்கு அனுமதி வழங்கியது காவல்துறை…!

English Summary

If the father does not write a will, does the daughter have a right to the property? What does the law say?

Next Post

செவ்வாய் கிரகத்தில் நகரம்.. இன்னும் 20 ஆண்டுகள் தான்..!! - அடித்து சொல்லும் எலான் மஸ்க்..

Sun Sep 8 , 2024
SpaceX, owned by Elon Musk, is interested in exploring what's on Mars.

You May Like