fbpx

வெங்காயத்தில் இப்படி கருப்பாக இருந்தால் யூஸ் பண்ணாதீர்கள்!… இது ஓர் பூஞ்சையா…! நச்சுவை உண்டாக்குகிறது!

வெங்காயத்தை உரிக்கும்போது காணப்படும் கருப்பு ஓர் பூஞ்சை ஆகும். இது நச்சுவை உண்டாகுவதால், இதனை சமையலுக்கு பயன்படுத்த வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வெங்காயம் இல்லாமல் எந்த சமையலும் செய்ய முடியாது. இருப்பினும், வெங்காயத்தில் பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. மனிதனின் செரிமான அமைப்பு மற்றும் இதய ஆரோக்கியத்தை பராமரிக்கும் ஆற்றல் வெங்காயத்திற்கு உள்ளது. நம் உடலில் ஏற்படும் சில ஒவ்வாமை பிரச்சனைகள் கண்களில் அரிப்பு, தொண்டை அரிப்பு மற்றும் ஜலதோஷம்போன்ற பல பிரச்சனைகளுக்கு தீர்வாக உள்ளது. இந்தநிலையில், வெங்காயத் தோலை உறிக்கும்போது கருப்பு அச்சு இருந்தால், அப்படிப்பட்ட வெங்காயத்தைச் சாப்பிட்டால் மியூகோர்மைகோசிஸ் வருமா? என்கிற பயமும் பலருக்கு உண்டு.

பொதுவாக வெங்காயத்தில் காணப்படும் இந்த கருப்பு அச்சு ஆஸ்பெர்கிலஸ் நைகர் என்று அழைக்கப்படுகிறது. இந்த வகை பூஞ்சை மண்ணில் காணப்படுகிறது. அதுதான் வெங்காயத்திலும் வருகிறது. இந்த கருப்பு அச்சு, கருப்புப் பூஞ்சையான ‘மியூகோர்மைகோசிஸ்’ என்பதில் இருந்து முற்றிலும் வேறுபட்டது. கருப்பு பூஞ்சைக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஆனால் இந்த கருப்பு அச்சு ஒரு வகையான நச்சுவை வெளியிடும் என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. உயிரை பறிக்கும் அளவுக்கு ஆபத்தை உண்டாக்காது என்றாலும் ஒவ்வாமையை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக ஏற்கெனவே அலர்ஜி இருப்பவர்கள் இந்த கருப்பு அச்சு இருக்கும் வெங்காயத்தை தவிர்ப்பது நல்லது என்கின்றனர். அதேபோல் ஆஸ்துமா உள்ளவர்களுக்கும் இது காற்றில் பறந்து அதை நுகரும்போது பாதிப்பை உண்டாக்கலாம் என கூறப்படுகிறது.

எனவே அப்படி கருப்பு அச்சு இருக்கும் லேயரை மட்டும் உறித்து எடுத்த பின் பயன்படுத்தலாம். ஆனால் பயன்படுத்தும் வெங்காய லேயரில் அந்த கருப்பு அச்சு படாதவாறு பார்த்துக்கொள்ளுங்கள்.

Kokila

Next Post

Body Weight | அதிக உடல் எடையால் உயிருக்கே ஆபத்து..? ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்ட அதிர்ச்சி ஆய்வு முடிவுகள்..!!

Mon Aug 14 , 2023
கடந்த 25 ஆண்டுகளில் அதிக எடை மற்றும் உடல் பருமனின் பாதிப்பு சட்டென உயர்ந்துள்ளது. இது பல இதயம் தொடர்பான நோய்களுக்கு பங்களிக்கும் என்றும் கூறப்பட்டு வருகிறது. இருப்பினும், பிஎம்ஐ மற்றும் அனைத்து காரணங்களால் ஏற்படும் இறப்புக்கும் இடையிலான தொடர்பை கண்டறிய நடந்த ஆய்வுகள் சீரற்றவையாக இருந்தன. இதை புரிந்துகொள்ள அமெரிக்காவில் உள்ள ரட்ஜர்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஒரு குழு, 5,54,332 பெரியவர்களின் தரவுகளை ஆய்வு செய்தது. அதில் சுமார் […]

You May Like