fbpx

தமிழ்நாட்டில் அறிக்கை வெளியானால் 500 பேருக்கு மேல் பாலியல் புகாரில் சிக்குவார்கள்..!! புயலை கிளப்பிய நடிகை ரேகா நாயர்..!!

தமிழ் சினிமாவில் பாலியல் புகார் தொடர்பான அறிக்கை வெளியானால், சுமார் 500 பேருக்கு மேல் சிக்குவார்கள் என நடிகை ரேகா நாயர் தெரிவித்திருப்பது பெரும் புயலை கிளப்பியுள்ளது.

மலையாள சினிமாவில் ஹேமா கமிட்டி அறிக்கை வெளியானதில் இருந்து, நடிகைகள் பலரும் தங்களுக்கு நடந்த பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து வெளிப்படையாக பேசி வருகின்றனர். கேரளாவை போல தமிழிலும் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை இருக்கிறதா? என்பது குறித்து அறிய கமிட்டி அமைக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது

இந்நிலையில் நடிகை ரேகா நாயர், மலையாள சினிமாவில் எழுந்துள்ள பாலியல் புகார்கள் கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள அவர், “பாலியல் தொல்லை என்பது மலையாள சினிமாவில் மட்டுமின்றி, அனைத்து மொழித்துறையிலும் உள்ளது. தமிழ் சினிமாவில் கூட லட்சக்கணக்கில் பாலியல் புகார்கள் உள்ளது.

மலையாள சினிமாவில் வெளியான ஹேமா கமிட்டி அறிக்கைபோல தமிழ் சினிமாவில் அறிக்கை வெளியானால், 500 பேருக்கு மேல் பாலியல் புகாரில் சிக்குவார்கள். இதுபோன்ற பிரச்சனைகள் பற்றி நடிகைகள் புகார் அளித்தால், சம்பந்தப்பட்ட நடிகர்கள் தொலைபேசியில் மிரட்டுவதாக” நடிகை ரேகா நாயர் பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளார்.

Read More : வாகன ஓட்டிகளே..!! இனி தப்பிக்கவே முடியாது..!! இந்த புதிய ரூல்ஸை கவனிச்சீங்களா..?

English Summary

Actress Rekha Nair’s statement that if a report on sexual harassment in Tamil cinema is published, more than 500 people will be caught, has created a big storm.

Chella

Next Post

பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர் இறந்தால் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை..!! மசோதா நிறைவேற்றம்..!!

Tue Sep 3 , 2024
In West Bengal, a law has been passed to impose the death penalty on those who commit sexual violence leading to death.

You May Like