fbpx

’திருமணத்திற்கு பின் மகன் இறந்துவிட்டால் தாய்க்கு சொத்தில் பங்கு கிடையாது’..!! சென்னை ஐகோர்ட் தீர்ப்பு..!!

இந்திய வாரிசு உரிமை சட்டத்தின்படி, திருமணமான மகன் இறந்து விட்டால், அவரது சொத்தில் தாய் பங்கு கேட்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

நாகையை சேர்ந்த மோசஸ் என்பவர் கடந்த 2012 ஆண்டில் உயிரிழந்துள்ளார். இவருக்கு வயதான தாய் உள்ளார். இவரது பெயர் பவுலின் இருதய மேரி. இந்நிலையில், மகனின் சொத்தில் பங்கு கேட்டு தாய் பவுலின் இருதய மேரி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நாகை நீதிமன்றம், மகனின் சொத்தில் தாய்க்கு பங்கு உள்ளது என தீர்ப்பளித்தது.

இந்த உத்தரவை எதிர்த்து மோசஸின் மனைவி அக்னஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், திருமணமான மகன் இறந்த நிலையில், சொத்தில் தாய் பங்கு கேட்பதற்கான கேள்வியே எழவில்லை. ஏனெனில் ,மனைவி மற்றும் குழந்தைகளுக்குத் தான் சொத்தில் பங்கு உள்ளது. தாய்க்கு பங்கு உண்டு என்ற நாகை மாவட்ட நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Chella

Next Post

என் மொத்த பிறவிக்கும் இந்த ஒரு விஷயம் போதும்… சூப்பர் ஸ்டாரின் பாராட்டு குறித்து மனம் நெகிழ்ந்த எஸ்.ஜே.சூர்யா.!

Sat Nov 18 , 2023
இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று இருக்கிறது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ் ஜே சூர்யா இந்த திரைப்படத்தில் நடித்திருந்தனர். இந்தத் திரைப்படம் வெளியான முதல் வாரத்தில் மட்டும் 45 கோடி வசூல் செய்திருக்கிறது. இந்தத் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து முக்கிய நகரங்களுக்கு சென்று படத்தின் வெற்றி கொண்டாட்டங்களில் படக்குழுவினர் கலந்து கொண்டு வருகின்றனர். […]

You May Like