பெண்களுக்கு எதிரான அரங்கேரும் குற்றச்சம்பவங்களை தடுக்கும் வகையில், மக்களவையில் புதிய மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த வெள்ளிக்கிழமை உடன் நிறைவடைந்தது.. இதற்கிடையே கடைசி நாளான வெள்ளிக்கிழமை பல்வேறு மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன. குறிப்பாக நமது நாட்டில் 160 ஆண்டுகளுக்கு மேலாக நடைமுறையில் இருக்கும் சட்டங்களில் மாற்றம் கொண்டு வரப்பட்டன. இதனை மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா அறிமுகம் செய்தார். அதன் பிறகு இது நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்பப்பட்டது.
இதில் இந்தியத் தண்டனை சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம், இந்தியச் சாட்சிய சட்டம் ஆகியவற்றுக்கு பதிலாக புது மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இதற்குப் பதிலாகப் பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா மசோதா, பாரதிய சக்ஷவா மசோதா தாக்கல் செய்யப்பட்டன. இதில் பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கும் வகையில் பல கடுமையான சட்டங்களை மத்திய அரசு முன்மொழிந்துள்ளது. பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்குத் தண்டனைகளைக் கடுமையாக்கும் வகையில் இந்தியத் தண்டனைச் சட்டத்தை மாற்றியமைக்கும் நோக்கில் இந்த மசோதாக தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்களையும், இந்தியாவில் பெண்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும் இந்தச் சட்டங்கள் உதவும்.
புதிய மசோதாவின்படி, திருமணமான பெண்களின் ஒப்புதல் இல்லாமல் கணவர் உடலுறவு கொள்வதை இப்போது marital rape என்று அழைக்கிறார்கள். இதனைக் குற்றமாக அறிவித்து இதற்கு எதிராகச் சட்டத்தைக் கொண்டு வர வேண்டும் என்று இப்போது பலரும் வலியுறுத்தி வருகிறார்கள். மத்திய அரசின் புதிய சட்டத்தில் இதற்கு எதிரான தண்டனை இல்லை என்ற போதிலும், 18 வயதுக்குக் குறைவான பெண் மனைவியாக இருந்தாலும் அவர்களுடன் உடலுறவு கொள்வதை பலாத்காரமாகக் கருதும் வகையில் புதிய சட்டத்தைக் கொண்டு வந்துள்ளனர்.