fbpx

’ராமர் இல்லையென்றால் நாடே இருக்காது’..!! ’தமிழ்நாட்டில் கலாசாரம், பாரம்பரியத்தை இளைஞர்கள் இழந்துள்ளனர்’..!! ஆளுநர் ரவி பரபரப்பு பேச்சு..!!

”ராமரை நீக்கிவிட்டு பார்த்தால் இந்தியா என்ற நாடே இல்லை” என ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை ஆளுநர் மாளிகையில் “ஸ்ரீராமரும் தமிழகமும் இணை பிரியா பந்தம்” என்ற புத்தக வெளியிட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, ”நாடு முழுவதும் பயணித்து மக்களுடன் சிறிது நேரம் ஒதுக்கினால் தெரியும், நாட்டின் ஒவ்வொரு இஞ்ச் இடத்திலும் ராமர் இருக்கிறார்.

மக்கள் மனதில் இருந்து ராமரை எப்போதும் நீக்க முடியாது. அப்படி ஒருவேளை நீக்க முயற்சி செய்தால் பாரதம் இருக்காது. நாடும் இருக்காது. இந்த நாட்டை இணைக்கும் பசையாக ராமர் இருக்கிறார். மொழி, இனம் கடந்து ராமர் மக்கள் மனதில் இடம்பிடித்திருக்கிறார். நாம் அனைவரையும் ஒருங்கிணைக்கும் சக்தி ஸ்ரீராமர் தான்.

தர்மம் இல்லாமல் பாரதம் கிடையாது. சனாதன தர்மம் ஒற்றுமை குறித்து பேசுகிறது. ராமர் வடநாட்டு கடவுள் என்ற கருத்து தமிழ்நாட்டில் கட்டமைக்கப்பட்டதால், இளைஞர்கள் நமது கலாசார, ஆன்மிக பாரம்பரியத்தை இழந்துள்ளனர்” என்று ஆளுநர் ஆர்.என்.ரவி பேசினார்.

Read More : கிழிந்த ரூபாய் நோட்டுக்களை எப்படி வங்கியில் மாற்றுவது..? கட்டணம் எவ்வளவு..? ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு..!!

English Summary

Governor RN Ravi’s statement that “If Ram is removed, there is no country called India” has created a sensation.

Chella

Next Post

'கத்துவதை நிறுத்து.. நான் ஒன்னும் உன் தந்தை அல்ல' நேரலை தொலைக்காட்சி விவாதத்தின் போது மோதல்..!! - வைரலாகும் வீடியோ

Sat Sep 14 , 2024
Strange! Ashutosh Almost Comes to Blows in a Live Debate With Anand Ranganathan; Where is Civility Now

You May Like