fbpx

வீட்டில் இந்த பொருட்கள் இருந்தால் போதும்..!! கண் திருஷ்டி காணாமல் போகும்..!!

கண்திருஷ்டி நீங்க சில எளிய பரிகாரங்களை வீட்டிலேயே செய்யலாம்.

இதற்கு வீட்டில் உள்ள கடுகு, மிளகு மற்றும் எலுமிச்சம்பழத்தை எடுத்துக்கொள்ளவும். கூடவே நல்லெண்ணெய்யை எடுத்துக் கொள்ளுங்கள். முதலில், வீட்டில் உள்ள சிறிய கிண்ணத்தை எடுத்துக் கொள்ளவும். அதில், கடுகை முக்கால் பங்கு போட்டுக் கொள்ளவும். இப்போது, அதில் 10 மிளகை சேர்க்கவும். இப்போது, அதில் 1 எலுமிச்சம் பழம் போடவும். இப்போது, அந்த கிண்ணத்தை வீட்டில் அனைவரும் பார்க்கும்படி வைக்க வேண்டும்.

இந்த கிண்ணத்தை வீட்டில் வைத்த ஒரு நாள் கழித்து அதற்கு அடுத்த நாள், அதாவது திங்கட்கிழமை வைக்கிறீர்கள் என்றால் புதன் கிழமை இப்போது கிண்ணத்தில் உள்ள எலுமிச்சம்பழத்தை எடுத்துக் கொள்ளவும். அதை இரண்டாக வெட்டி வலது, இடது என இரண்டு புறமும் தூக்கி வீசவும். பின்னர், கடுகு மற்றும் மிளகை ஒரு வெள்ளை நிற கதர் துணியில் போட்டு நன்றாக முடிச்சு போட்டுக் கொள்ளவும்.

இதை வீட்டு வாசலில் வைக்கவும். இதில் நல்லெண்ணெய் ஊற்றி அதை எறிய விட வேண்டும். அப்போது, மிளகும், கடும் நன்றாக பொரியும். அவ்வாறு பொரியும்போது நம் வளர்ச்சி பிடிக்காதவர்களின் கண் திருஷ்டியும் பொரிந்துவிடும் என்று நம்பப்படுகிறது. கண் திருஷ்டி போன்றவை இருந்தாலும் நம் உழைப்பின்போதும், இறைவன் மீதும் நம்பிக்கை வைத்து நமது செயலில் கவனம் செலுத்தி, முயற்சிப்பதே பிரதானம் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More : ’விஜய் கொடி ஏற்றிய நேரம் சரியில்லை’..!! ’அந்த விஷயத்தில் சந்தேகம் தான்’..!! பரபரப்பை கிளப்பிய ஜோதிடர்..!!

English Summary

You can do some simple home remedies for eye strain. You can see this in this post.

Chella

Next Post

கவனம்..! இன்று காலை 10.30 மணி முதல்... விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு...!

Fri Aug 23 , 2024
Important announcement for farmers from 10.30 am today

You May Like