fbpx

ஒரு மாசத்துல இது நடக்கலனா பிக் பாஸ் வீடு இருக்காது..! பகிரங்க எச்சரிக்கை விடுத்த தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன்.!

தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் திரு.வேல்முருகன் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பகிரங்கமாக சவால் விட்டிருக்கும் சம்பவம் அரசியல் வட்டாரத்திலும் சினிமா துறையிலும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக தமிழர் வாழ்வுரிமை கட்சியின் பொதுக்கூட்டத்தில் பேசிய வேல்முருகன் பிக் பாஸ் மற்றும் விஜய் டிவி அடித்து நொறுக்கப்படும் என பகிரங்கமாக எச்சரிக்கை வெளியிட்டு இருக்கிறார்.

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் கூட்டம் சேலத்தில் நடைபெற்றது. இதில் அந்த கட்சியின் பெரும்பான்மையான தொண்டர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அதன் தலைவர் வேல்முருகன் தமிழக கலாச்சாரத்தை சீரழிப்பதற்கென்றே பிக் பாஸ் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது என வன்மையாக கண்டனத்தை தெரிவித்தார்.

தமிழர்களுக்கு என்று ஒரு கலாச்சாரம் மற்றும் மரபு இருக்கிறது என்றும் அது அனைத்தையும் நாசம் செய்யும் வகையில் ஒரு நிகழ்ச்சியை கமல்ஹாசனும் விஜய் டிவியும் நடத்தி வருவதாக அவர் கடுமையாக சாடி இருக்கிறார். ஏண்டா நாய்களா.! தமிழர்களுக்கு என்று ஒரு குணம் இருக்கிறது. இந்த நிகழ்ச்சியை நீங்கள் சரி செய்து கொள்ளாவிட்டால் ஒரு மாதத்தில் விஜய் டிவி மற்றும் பிக் பாஸ் நடைபெறும் இடம் அடித்து நொறுக்கப்படும் என எச்சரிக்கையும் விடுத்தார்.

மேலும் கூட்டத்தில் இருந்த தனது தொண்டர்களிடம் நான் தான் உங்களுக்கு பிக் பாஸ். உங்களுக்கு கட்டளை இடுகிறேன். ஆளுக்கு ஒரு ஐம்பது பேரை திரட்டிக் கொண்டு வாருங்கள். ஒரு மாதத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சி சீர் செய்யப்படவில்லை என்றால் விஜய் டிவி மற்றும் பிக் பாஸ் நடக்கும் அரங்கம் இரண்டையும் அடித்து உடைத்து நாசம் செய்வதுதான் நான் உங்களுக்கு தரும் டாஸ்க் எனவும் தெரிவித்திருக்கிறார். இது அரசியல் மற்றும் மீடியா வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Kathir

Next Post

யார் வேண்டுமானாலும்!… எங்கு வேண்டுமானாலும்!… ரேஷன் கடைகளுக்கு பறந்த அதிரடி உத்தரவு!

Mon Nov 20 , 2023
எந்த மாநிலத்தை சேர்ந்தவரும் அவர்கள் வசிக்கும் பகுதியில், ரேஷன் பொருட்கள் வாங்கிக்கொள்ளலாம் என மத்திய அரசு அதிரடியாக அறிவித்துள்ளது. அதாவது, ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தின் மூலமாக, பிற மாநிலத்தை சேர்ந்தவர்கள் தங்கள் வசித்தால், வசிக்கும் பகுதிகளிலேயே தேவையான ரேஷன் பொருட்களை வாங்கிக்கொள்வது, நடைமுறையில் இருந்து வருகிறது. இந்த திட்டத்தின் படி, பிற மாநிலத்தவர்களுக்கு மறுக்காமல் பொருட்கள் வழங்க வேண்டும் என, மாவட்ட வழங்கல் அலுவலர்களுக்கு தமிழக […]

You May Like