fbpx

இது இல்லையென்றால் செல்போன் யூஸ் இல்லை!?… என்ன காரணம் என்பதை அறிந்துகொள்வோம்!

செல்போனில் அடிப்பகுதியில் சார்ஜ் போடப்படும் இடத்திற்கு அருகில் இருக்கும் சிறிய ஓட்டை எதற்காக இருக்கிறது என்பதை அறிந்துகொள்வோம்.

இன்றைய நவீன காலத்திற்கு ஏற்றாற்போல் செல்போன்களின் பயன்பாடு அதிகமாகிக்கொண்டே செல்கிறது. இந்த செல்போன்களில் பொருத்தப்பட்டுள்ள ஒவ்வொரு வடிவமைப்பும் ஒவ்வொரு காரணத்திற்காக வைக்கப்பட்டுள்ளது. அதன்படி செல்போன்களில் அமைக்கப்பட்டுள்ள சில வடிவமைப்புகள் குறித்து நமக்கு தெரியாமலே அதை யூஸ் பண்ணிட்டு இருக்கோம். அந்தவகையில், சார்ஜ் செய்யும் இடத்திற்கு அருகில் சிறிய ஓட்டை ஒன்று இருக்கும். அது எதற்காக இருக்கிறது என்பது குறித்து இந்த தொகுப்பில் அறிந்துகொள்வோம்.

அந்த மிகச்சிறிய துளை நம் போனின் இரைச்சலை ரத்து செய்யும் மைக்ரோபோன் ஆகும். அதாவது நாம் போன் பேசும்போது மற்றவருக்கு தெளிவாக கேட்க செய்யும் மைக்ரோபோன் என்று குறிப்பிடலாம். இது நாம் பேசும்போது மட்டுமே இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் ஓட்டை சிறியதாக இருப்பதால் பேசும் வார்த்தைகளை தெளிவாக கேட்பதற்கு உதவுகிறது. அதேபோல், நம்மை சுற்றி சத்தம் இருந்தாலும், இந்த மைக்ரோபோன் அனைத்துவித சத்தங்களையும் உள்வாங்காத வகையில் உருக்கப்பட்டுள்ளது. அதாவது செல்போனின் அடிப்பகுதியில் இந்த ஓட்டை இருப்பதாலேயே இரைச்சலை உள்வாகுவதில்லை.அதே நேரத்தில் நாம் பேசும் ஒலி மிகச்சரியாக துளை அருகே இருப்பதால் குரல் தெளிவாக கேட்க உதவுகிறது.

Kokila

Next Post

இதை‌ செய்தால் ரூ.51,000 பரிசுத்தொகை வழங்கப்படும்...! மத்திய அரசு அதிரடி அறிவிப்பு...!

Sat Apr 15 , 2023
Mygov இணையத்தில் இலச்சினை(Logo) மற்றும் மேற்கோள் வாசக வடிவமைப்பு போட்டி நடைபெற உள்ளது. நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்பு துறை (டிஏஆர்பிஜி) அதன் மையப்படுத்தப்பட்ட மக்கள் குறைதீர்ப்பு மற்றும் கண்காணிப்பு அமைப்பின் இணைய தளத்திற்கு, மனதில் நிற்கும் வகையிலான இலச்சினை(Logo) மற்றும் மேற்கோள் வாசகத்தை வடிவமைப்பதற்கான போட்டியை MyGov தளத்தில் நடத்துகிறது. இதில் பங்கேற்குமாறு பொதுமக்களுக்கு நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்பு துறை அழைப்பு விடுத்துள்ளது. இதற்கான […]

You May Like