fbpx

உங்க காரில் இப்படி இருந்தால் சிக்கல் தான்..!! இனி போலீஸ் தேவையில்லை… பொதுமக்களே போதும்..!! உஷாரா இருங்க..!!

சென்னையில் இரு சக்கர வாகனத்தில் செல்வோர் ஹெல்மெட் அணியாமல் சென்றால் அபராதம் விதிக்கப்படுகிறது. போலீஸ் வாகன சோதனையில் இல்லை என்றாலும் ஆன்லைன் முறையில் அபராதம் விதிக்கப்படுகிறது. அதாவது, போலீசிடம் சிக்காமல் பொதுமக்களிடம் சிக்கினாலும் உங்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. எனவே, அலட்சியத்துடன் ஹெல்மெட் அணியாமல் பயணித்தால் உங்களுக்கு ஆபத்து ஏற்படும் போது உயிர் போகும் அபாயமும் உள்ளது. அத்துடன் விதிமீறலில் சென்றதற்காக அபராதமும் செலுத்த வேண்டியதிருக்கும். நீங்கள் மட்டுமல்ல உங்கள் பின்னால் அமர்ந்து செல்பவரும் கண்டிப்பாக ஹெல்மட் அணிந்திருக்க வேண்டும். அப்படி அணியாமல் சென்றால் உங்களுக்கு 1,000 ரூபாயும், உங்களுடன் செல்வோருக்கு ரூ.1000 என மொத்தம் ரூ.2 ஆயிரம் செலுத்த வேண்டியிருக்கும்.

காரை பொறுத்தவரை சீட் பெல்ட் அணியாமல் போனால் கண்டிப்பாக அபராதம் விதிக்கப்படுகிறது. அதேபோல் நம்பர் பிளேட் விஷயத்திற்காகவும் கார் மற்றும் பைக்கிற்கு அபராதம் விதிக்கப்படுகிறது. உங்கள் நம்பர் பிளேட் சரியாக இல்லை அதாவது அரசு அனுமதிக்கப்பட்ட வகையில் இல்லாமல், சில எழுத்துகள் பெரியதாகவோ அல்லது சில எழுத்துக்கள் சிறியதாகவோ இருந்தால் அபராதம் நிச்சயம் விதிக்கப்படும். இதனை போலீஸ் பார்த்து அபராதம் விதிக்க வேண்டும் என்ற நிலை இப்போது இல்லை.

பொதுமக்கள் யாராவது நீங்கள் சாலைகளில் செல்லும் போது, சிக்னலில் நிற்கும் போது புகைப்படம் எடுத்து சென்னை போலீஸை ட்விட்டரில் டேக் செய்து புகார் அளித்தாலே போதும். உங்களுக்கு கண்டிப்பாக அபராதம் விதித்து விடுவார்கள். எனவே, நம்மை யார் கேட்க போகிறார்கள் என்று நினைத்து நம்பர் பிளேட்டை இஷ்டத்திற்கு எழுதக் கூடாது. ஒருவேளை அப்படி எழுதி இருந்தால் உடனே மாற்றிவிடுங்கள். இல்லாவிட்டால் சென்னையில் எங்கு பார்த்தாலும் உங்களுக்கு அபராதம் நிச்சயம் விதிப்பார்கள்.

சென்னையில் ஈசிஆர் சாலையில் பாலவாக்கம் சிக்னல் அருகே ஒரு காரின் நம்பர் பிளேட்டில் எழுத்துக்கள் சிறியதாகவும் பெரியதாகவும் மாறி மாறி இருந்தது. அவருக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதேபோல் இன்னொரு முக்கியமான விஷயம் சாலைகளில் சிக்னலை மீறி செல்வதை யாராவது வீடியோ எடுத்து அனுப்பினாலும் அபராதம் விதிக்கப்படுகிறது. கார் மற்றும் பைக் இருவருக்குமே இது பொருந்தும். தவறான பார்க்கிங்கிற்கும் அபராதம் கார் மற்றும் பைக்கிற்கு விதிக்கப்படுகிறது. எனவே, மக்களே சென்னையில் கவனமாக இருங்கள் விதிமீறிலில் ஈடுபட வேண்டாம்.

Chella

Next Post

உள்ள ஒன்னுமே போடலையா..? உச்சகட்ட கவர்ச்சியில் காஜல்..!! குழந்தை பெற்ற பிறகும் இப்படியா..?

Fri Jul 28 , 2023
சினிமா திரையுலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் காஜல் அகர்வால். தமிழில் விஜய், அஜித்துக்கு ஒரு புறம் ஜோடி போட்டு நடித்து வந்தார் என்றால், தெலுங்கில் அல்லு அர்ஜுன், ராம் சரண் போன்ற இளம் நடிகர்களுக்கு ஜோடி போட்டு நடித்தார். திருமணம் ஆகி குழந்தை பெற்ற பிறகும், தொடர்ந்து ஹீரோயினாக நடித்து வரும் காஜல் அகர்வால், உச்சகட்ட கவர்ச்சியில் போட்டோ ஷூட் நடத்தி ரசிகர்களை அதிர வைத்துள்ளார். காஜல் அகர்வால், அடுத்தடுத்து […]

You May Like