நீர்நிலை, காலி இடங்களில் கழிவுநீரை வெளியேற்றும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது..
இது குறித்து மாசு கட்டுப்பாட்டு வெளியிட்டுள்ள அறிக்கையில் “ உரிமம் இல்லாத லாரிகள் மூலம் கழிவு நீர் சட்டவிரோதமாக வெளியேற்றப்படுவதாக தொடர்ந்து புகார் வந்தது.. இதை தொடர்ந்து வெவ்வேறு இடங்களில், வெவ்வேறு நாட்களில் மாசுக்கட்டுப்பாட்டு துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.. அதில், குறிப்பாக சென்னை மற்றும் புறநகரில் கழிவு நீர், நீர் நிலைகள் மற்றும் காலி இடங்களில் சட்ட விரோதமாக வெளியேற்றப்படுவது கண்டறியப்பட்டது..
எனவே நீர்நிலை, காலி இடங்களில் கழிவுநீரை வெளியேற்றினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.. அந்த வாகனங்களின் உரிமம் ரத்து செய்யப்படும்.. உள்ளாட்சி அமைப்புகளிடம் இருந்து தகுந்த உரிமம் பெற்ற டேங்கர் லாரிகள் மூலமே கழிவு நீரை அகற்ற வேண்டும்.. இந்த விதிகளை மீறுவோர் மீது, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் மின்னஞ்சல் மூலம் புகாரளிக்கலாம்..” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..