fbpx

போட்டியை வேறு இடத்திற்கு மாற்றினால் உலக கோப்பைக்கு வரமாட்டோம்..!! பாகிஸ்தான் பகிரங்க அறிவிப்பு..!!

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியை வேறு இடத்துக்கு மாற்றினால், நாங்கள் உலக கோப்பைக்கு இந்தியா வரமாட்டோம் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் எச்சரித்துள்ளது.

இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட அணிகள் பங்கேற்கும் ஆசியப் கோப்பை கிரிக்கெட் போட்டி விரைவில் நடைபெறவுள்ளது. கடந்தாண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த ஆசிய கோப்பை, இந்த முறை பாகிஸ்தானில் நடக்கும் என்று கூறப்பட்டிருந்தது. இந்நிலையில், ஆசிய கோப்பையை பாகிஸ்தானுக்கு பதிலாக ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தை கொதிப்படைய செய்துள்ளது. ‘நடப்பாண்டு ஆசிய கோப்பையை ஏற்கனவே பாகிஸ்தானில் நடத்த முடிவு செய்யப்பட்டுவிட்டது. இப்போது இடத்தை மாற்றுவது என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. ஆசிய கோப்பை போட்டிகளை வேறு இடத்துக்கு மாற்றினால், இந்தாண்டு இந்தியாவில் நடைபெற உள்ள 50 ஓவர் கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டியில் பாகிஸ்தான் பங்கு பெறாது’ என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கூறியுள்ளது.

பாதுகாப்பு காரணமாக இந்தியா, ஆசிய கோப்பை போட்டிகளில் பாகிஸ்தான் செல்லாது என பிசிசிஐ செயலாளர் அமித்ஷா கடந்தாண்டே கூறியிருந்தார். அப்போதே, ‘நீங்கள் ஆசிய கோப்பையில் கலந்து கொள்ளாவிட்டால், நாங்கள் உங்கள் நாட்டில் நடக்கும் உலகக் கோப்பையை புறக்கணிப்போம்’ என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கூறியிருந்தது. தற்போது ஜெய் ஷா ஆசிய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய தலைவராகவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Chella

Next Post

ஐந்து வயது சிறுமியிடம் தகாத முறையில் நடந்து கொண்ட  கோழிக்கடை உரிமையாளர்! 20 ஆண்டுகள் சிறை !

Sun Feb 5 , 2023
சிறுமிக்கு தொடர் பாலியல் தொல்லை கொடுத்து வந்த திருப்பூரைச் சார்ந்த கோழிக்கடை உரிமையாளருக்கு மாவட்ட மகளிர் நீதிமன்றம் 20 ஆண்டு தண்டனை வழங்கி  தீர்ப்பளித்து இருக்கிறது. தர்மபுரியைச் சார்ந்த முருகன்  (38)என்பவர்  திருப்பூர் முருகானந்தபுரத்தில் சொந்தமாக கோழிக்கடை நடத்தி வருகிறார். இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு அந்தப் பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த ஐந்து வயது சிறுமிக்கு தொடர்ச்சியாக  பாலியல் தொல்லை கொடுத்து வந்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து அவரது பெற்றோர்  மாவட்ட அனைத்து மகளிர் காவல் […]

You May Like