fbpx

ஜனவரி 15ஆம் தேதிக்குள் விண்ணப்பித்தால்..!! மாதம் ரூ.50,000..!! மத்திய அரசு அதிரடி அறிவிப்பு..!!

இளம் எழுத்தாளர்களுக்கு வழிகாட்டும் பிரதம மந்திரியின் யுவா 2.0 திட்டத்தின் கீழ் மாதம் ரூ.50,000 பெறலாம்.

மத்திய அரசு PM யுவா 2.0 திட்டத்தினை அறிவித்துள்ளது. அதன்படி, 30 வயதுக்குட்பட்ட இளம் எழுத்தாளர்களுக்கு மாதம் ரூ. 50 ஆயிரம் வழங்கப்பட இருக்கிறது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்புபவர்கள் ஜனவரி 15ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், தேர்ந்தெடுக்கப்படுவோருக்கு 6 மாதங்களுக்கு மாதம் ரூ.50 ஆயிரம் கிடைக்கும். நாட்டில் இலக்கியத்தையும் கலாச்சாரத்தையும் வளர்க்க இந்த முன்னெடுப்பு செய்யப்பட்டுள்ளது.

ஜனவரி 15ஆம் தேதிக்குள் விண்ணப்பித்தால்..!! மாதம் ரூ.50,000..!! மத்திய அரசு அதிரடி அறிவிப்பு..!!

இந்திய படைப்புகளை உலக அளவில் எடுத்துச் செல்லும் வகையில், மத்திய கல்வி அமைச்சகம் மற்றும் உயர் கல்வித் துறை இணைந்து இளம் எழுத்தாளர்களுக்கு வழிகாட்டும் பிரதம மந்திரியின் யுவா 2.0 திட்டத்தை அறிமுகம் செய்தது. இது இந்தியா@75 திட்டத்தின் ஒரு புதுமையான மற்றும் ஆக்கப்பூர்வமான முயற்சியாகும். இந்திய பாரம்பரியம், கலாச்சாரம் மற்றும் அறிவு அமைப்பு ஆகியவற்றை மேம்படுத்த பல்வேறு மொழிகளில் பல்வேறு துறைகளில் எழுதக்கூடிய எழுத்தாளர்களை ஊக்குவிக்க இந்த திட்டம் வழிவகுக்கிறது. இந்த திட்டத்தின் மூலம் இளைஞர்கள் தேசிய இயக்கம், நாம் பெரிதும் அறியப்படாத சுதந்திர போராட்ட வீரர்கள், தியாகிகள், சுதந்திரப் போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த மறக்கப்பட்ட அல்லது மறைக்கப்பட்ட இடங்கள் போன்ற கருப்பொருள்களில் எழுத ஆர்வமுள்ளவர்கள் mygov.in இல் பதிவு செய்ய வேண்டும்.

Chella

Next Post

வாகன ஓட்டிகளே கவனம்...! சாலை விபத்துக்கள் குறித்து மத்திய அரசு வெளியிட்ட முக்கிய விவரம்...!

Thu Dec 29 , 2022
2021ல் இந்தியாவில் சாலை விபத்துக்கள் என்ற ஆண்டறிக்கையை மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் காவல் துறை மூலம் பெறப்பட்ட தகவல்களின் படி, இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.இந்த அறிக்கையின் படி, 2021ம் ஆண்டில் 4,12,432 எதிர்பாராத சாலை விபத்துக்கள் நடைபெற்றதில் 1,53,972 பேர் உயிரிழந்தனர். 3,84,448 பேர் காயமடைந்தனர். அதற்கு முந்தைய ஆண்டான 2020-ம் ஆண்டில் விபத்துக்களும், அதனால் ஏற்பட்ட உயிரிழப்புகளும், […]

You May Like