கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இயங்கி வரும் ஒரு டீக்கடையில் 18 வயது சிறுவன் வேலை பார்த்து வந்துள்ளான். அப்போது, இந்த டீக்கடைக்கு அடிக்கடி டீ குடிக்க வரும் திருநங்கைகளுடன் சிறுவனுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. மேலும், அதிக பணம் சம்பாதிக்க எங்களை போல வேலை செய் என்று அந்த சிறுவனிடம் திருநங்கைகள் 5 பேரும் ஆசைவார்த்தை கூறியுள்ளார்.
ஆனால், அதற்கு சிறுவன் சம்மதிக்கவில்லை. இருப்பினும், தொடர்ந்து அந்த சிறுவனை தொல்லை செய்து வந்துள்ளனர். ஒருகட்டத்தில் சிறுவனை கடத்திச் சென்று மிரட்டி, தெருவில் பிச்சை எடுக்க வைத்துள்ளனர். இதையடுத்து, கடந்த 12ஆம் தேதி 5 திருநங்கைகளும் சிறுவனின் வீட்டிற்கு சென்றுள்ளனர்.
அப்போது சிறுவனிடம், ஆண் பிச்சைக்காரனாக ஒரு நாளைக்கு 2,000 ரூபாய் சம்பாதித்தால், பெண்ணாக எவ்வளவு சம்பாதிப்பாய் என மூளைச்சலவை செய்துள்ளனர். அதற்கு மறுத்த வாலிபரை வலுக்கட்டாயமாக பிடித்து சில ஊசிகளை போட்டுள்ளனர். பின்னர் மயக்கமடைந்த சிறுவனின் ஆணுறுப்பை வெட்டியுள்ளனர்.
சிறிது நேரம் கழித்து, மயக்கத்தில் இருந்து விழித்த சிறுவன், தனது ஆணுறுப்பு காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்தார்ன். அதன்பிறகு ஆகஸ்ட் 3ஆம் தேதி சிறுவனை பாலியல் தொழிலில் ஈடுபட வற்புறுத்தியுள்ளனர். ஆனால், அவர்களிடம் இருந்து தப்பியோடி வந்த இளைஞர், காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து 5 திருநங்கைகளையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
Read More : டிஎன்பிஎஸ்சியில் 654 காலிப்பணியிடங்கள்..!! விண்ணப்பிக்க நாளையே கடைசி..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!