fbpx

இதை மட்டும் செய்தால் நீங்களும் வெல்லலாம் 10 லட்சம்…! தமிழக அரசு அறிவிப்பு..

மீண்டும் மஞ்சப்பை திட்டத்தை ஊக்குவிக்கும் விதமாக சட்டசபை கூட்டத்தில் 2022-2023-ம் ஆண்டிற்கான மஞ்சப்பை விருது குறித்து அறிவிப்பை வெளியிட்டது. இதனை முன்னிட்டு தமிழ்நாடு மாசுகட்டுப்பாடு வாரியம், பிளாஸ்டிக்கிற்கு மாற்றாக சுற்றுப்புறங்கள் மற்றும் தங்களுடைய வளாக பகுதியை பிளாஸ்டிக் இல்லாததாக மாற்ற ஊக்குவிப்பதில் முன்மாதிரியாக திகழும் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் வணிக வளாகங்களுக்கு 2022-23-ம் ஆண்டிற்கான மஞ்சப்பை விருதுகளை வழங்கி கவுரவிக்க முன்வந்துள்ளது.

ஒருமுறை பயன்படுத்திவிட்டு தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் தடையை திறம்பட செயல்படுத்தி, தங்கள் வளாகத்தை பிளாஸ்டிக் இல்லாத வளாகமாக மாற்றும் சிறந்த பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் வணிக வளாகங்களுக்கு விருது வழங்கப்படும். பிளாஸ்டிக்கிற்கு மாற்றாக மஞ்சப்பை போன்ற சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்றுகளின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் விதமாக மாநில அளவில் 3 சிறந்த பள்ளிகள், 3 சிறந்த கல்லூரிகள் மற்றும் 3 சிறந்த வணிக வளாகங்களுக்கு இந்த விருது வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விருது பெறுபவர்களுக்கு விருதுடன் முதல் பரிசாக 10 லட்சமும், இரண்டாம் பரிசாக 5 லட்சம் மற்றும் மூன்றாம் பரிசாக மூன்று லட்சம் வழங்கப்படும், சென்னையில் உள்ளவர்கள் இதற்கான விண்ணப்ப படிவங்களை மாவட்ட ஆட்சியர் அலுவலக chennai.nic.in என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம், இந்த அறிவிப்பு சென்னை மட்டுமில்லாமல் தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களிலும் அறிவிக்கப்பட்டுள்ளது, விருப்பமுள்ளவர்கள் அந்தந்த மாவட்டத்தின் ஆட்சியர் அலுவலக அல்லது இணையதள பக்கத்திற்கு சென்று விண்ணப்பத்தை பெறலாம்.

Kathir

Next Post

’இனி இன்டர்நெட் இல்லாமலேயே காணாமல்போன ஃபோனை கண்டுபிடிக்கலாம்’..!! ஈசியான வழி இதோ..!!

Thu Jan 5 , 2023
மொபைல் ஆன்லைனில் இல்லாத போதும் கூட, இந்த ஃபைண்ட் மை டிவைஸ் வசதியை பயன்படுத்தி மொபைலை டிராக் செய்ய முடியும் என கூகுள் அறிவித்துள்ளது. இந்த புதிய வசதிக்கான அறிவிப்பை டிசம்பர் 22 சேன்ஜ் லாகில் தான் குறிப்பிடப்பட்டிருந்தது. அதில், தற்போது பைண்ட் மை டிவைஸ் மூலம் மொபைலில் எண்கிரிப்டட் இருந்த லொகேஷனை நம்மால் ட்ராக் செய்ய முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது இனி உங்கள் மொபைல் ஆன்லைனில் இல்லாமல் […]
’இனி இன்டர்நெட் இல்லாமலேயே காணாமல்போன ஃபோனை கண்டுபிடிக்கலாம்’..!! ஈசியான வழி இதோ..!!

You May Like