fbpx

வீட்டில் இதை செய்தால் உங்கள் குழந்தைகளின் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்..!! பெண்களே தெரிஞ்சிக்கோங்க..!!

நாம் நம்முடைய தேவைகளுக்காக, கஷ்டங்கள் தீர அல்லது நினைத்த காரியம் நிறைவேற வேண்டும் என்பதற்காக தீபம் ஏற்றி வழிபடுவது வழக்கம். அதேபோல், குழந்தைகளின் வாழ்க்கையிலும் எவ்வித தடைகளுமின்றி, அவர்களது எதிர்காலம் சிறப்பாக அமைய தீபம் ஏற்றலாம். இந்த தீபத்துடன் ஒரு எளிய பரிகாரத்தை செய்தால் எதிர்மறை சக்திகள் நீங்கி, கண் திருஷ்டியும் விலகிவிடும்.

முதலில் ஏதாவது ஒரு விளக்கை எடுத்துக் கொள்ளுங்கள். பிறகு நீங்கள் வீட்டிற்குள் எந்த இடத்தில் விளக்கி ஏற்றப் போகிறீர்களோ, அங்கு கல் உப்பை பரப்பி அதன் மேல் அந்த விளக்கை வைக்க வேண்டும். இப்போது விளக்கில் நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி திரி போட்டு தீபம் ஏற்றுங்கள். தீபம் ஏற்றிய பின், அதில் இரண்டு கல் உப்பை போடுங்கள். பிறகு இரண்டு மிளகாய் வற்றலை தீபம் எரியும் இடத்திற்கு பக்கத்தில் வைக்கவும்.

பிறகு ஒரு எலுமிச்சை பழத்தை எடுத்து அதை 2 துண்டாக வெட்டி, ஒரு துண்டில் கல் உப்பையும், மறு துண்டில் குங்குமத்தையும் வைக்கவும். பிறகு வீட்டிற்கு வெளியே சென்று நிலை வாசலுக்கு முன்பாக நின்று கொண்டு, திருஷ்டி சுற்றுவது போல் வலது புறமும் இடது புறமும் மூன்று முறை சுற்றுங்கள். பின்னர், வலது புற கையில் இருக்கும் எலுமிச்சை பழத்தை இடது புறமாகும், இடது புற கையில் இருக்கும் எலுமிச்சை பழத்தை வலது புறமாகவும் தூக்கி எறிந்து விடுங்கள். பின் உங்களது கை கால் முகத்தை கழுவிக்கொண்டு வீட்டிற்குள் செல்லுங்கள்.

இப்படி திருஷ்டி சுற்றினால் வீட்டில் இருக்கும் எதிர்மறை ஆற்றல்களும், கண்திருஷ்டியும் விலகிவிடும். மேலும், குழந்தைகளின் வாழ்க்கையில் இருக்கும் அனைத்து தடைகளும் நீங்கும். இந்த தீபத்தை நீங்கள் தொடர்ந்து ஏற்றி வந்தால், விரைவில் உங்கள் வீட்டில் மற்றும் உங்களுடைய குழந்தைகளின் வாழ்க்கையில் நல்ல மாற்றத்தை பார்ப்பீர்கள்.

Read More : புயலை கிளப்பிய விஜய்..!! ஆட்சியில் பங்கு வேண்டும்..!! முதல்வர் ஸ்டாலினுக்கு பறந்த பரபரப்பு கடிதம்..!!

English Summary

For the future of the children to be better, to get the grace of the deity, just lighting a lamp is enough. Let’s see what it is in this post.

Chella

Next Post

த.வெ.க மாநாட்டில் கலந்து கொள்ள வந்த 6 த.வெ.க தொண்டர்கள் உயிரிழப்பு... தலைவர் விஜய் இரங்கல்...!

Tue Oct 29 , 2024
6 T.V.K. volunteers who came to participate in the conference lost their lives... President Vijay mourns

You May Like