முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்ந்த வழக்கை உச்சநீதிமன்றம் இன்று விசாரிக்கிறது.
அமலாக்கத்துறை கைது நடவடிக்கைக்கு எதிராகவும், பிணை வழங்க கோரியும் செந்தில் பாலாஜி வழக்கு தொடர்ந்தார். அவர் தொடுத்த மனு மீதான விசாரணையை இன்று விசாரிப்பதாக கடந்த 6ஆம் தேதி உச்சநீதிமன்றம் தெரிவித்தது. கடந்த 2 முறை வழக்கு ஒத்திக்கப்பட்ட நிலையில், கடந்த 6ஆம் தேதி வழக்கு விசாரணைக்கு வந்த போது, அமலாக்கத்துறை சார்பில் வழக்கை ஒத்திவைக்க கோரிக்கை வைக்கப்பட்டது.
ஆனால் இதற்கு வழக்கை ஒத்திவைக்கக் கூடாது. அதற்கு அனுமதிக்கவே கூடாது என்று செந்தில் பாலாஜி தரப்பு எதிர்ப்பு தெரிவித்தது. இருப்பினும், வழக்கை ஒத்திவைத்த நீதிபதிகள் மே 15ஆம் தேதி விசாரணை நடத்தப்படும் என்று கூறினார். மேலும் மே 15ஆம் தேதி, அதாவது இன்று நிச்சயம் விசாரணை நடைபெறும் என உறுதி அளித்துள்ளனர்.
ஆனால், மே 18ஆம் தேதியில் இருந்து ஜூலை 7ஆம் தேதி வரை உச்சநீதிமன்றத்தில் கோடை விடுமுறை விடப்படும். இதனால் மே 15 ஆம் தேதி நிவாரணம் கிடைக்க வேண்டும். அப்போது பெயில் கிடைக்கவில்லை என்றால் பிறகு ஒன்றரை மாதம் செந்தில் பாலாஜி சிறையில் இருக்க வேண்டியிருக்கும்.
Read More : BREAKING | ’நேற்று தடை… இன்றே வாபஸ் வாங்கிய தமிழ்நாடு அரசு’..!! என்ன காரணம்..?