சரியாக 8-9 மணி நேரம் தூங்காமல் இருப்பவர்கள், மன அழுத்தத்தால் தூங்காமல் இருப்பவர்களுக்கு பல நோய்கள் பாதிக்கக்கூடும். தூக்கமின்மையால், மாரடைப்பு மற்றும் இதயம் தொடர்பான பல நோய்கள் ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது.
சரியாக தூங்காமல் இரவில் விழித்திருந்தால் உங்களுக்கு இதய பாதிப்பு தொடர்பான நோய்கள் வரக்கூடும். இப்படி இரவில் தூங்காமல் இருப்பவர்களுக்கு இதயத் துடிப்பு அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. மேலும் உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்படலாம் என கூறப்படுகிறது.
இரவில் நேரம் கழித்து தூங்கி காலையில் சீக்கிரமாக எழுந்துகொள்பவர்களுக்கு உடல் பருமன் அதிகரிக்கும். இதனுடன், மன அழுத்தமும் ஏற்படலாம். தூக்கமின்மை காரணமாக, நீங்கள் பல நோய்களுக்கு பலியாகலாம். மிக குறைந்த நேர தூங்குவதால் உடல் நலம் பாதிப்பதை போல், அதிக நேரம் தூங்கினாலும் உடல் நலம் பாதிக்கும். 8-9 மணி நேரம் இல்லாமல் சிலர் அதிக நேரம் தூக்கத்திற்காக செலவிடுவார்கள். சிலர் பகலிலும் தூங்குவார்கள், இப்படி அதிக நேரம் தூங்குவதால் நீரிழிவு, இதய நோய் போன்ற பாதிப்புக்கள் அதிகரிக்கும்.