fbpx

”இனி கரண்ட் அதிகமா யூஸ் பண்ணா அபராதம் தான்”..!! வெளியான முக்கிய எச்சரிக்கை..!!

தமிழ்நாடு மின்சாரம் வழங்கல் சட்டத்தின் திருத்தத்தின்படி கூடுதல் லோடு மின்சாரத்தை பயன்படுத்தும் நபர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மின்சாரம் வழங்கல் சட்ட திருத்தத்தின்படி, 12 மாதங்களில் அனுமதிக்கப்பட்ட மின்சுமையை 3 முறை மீறும் வீட்டு நுகர்வோர், கூடுதல் மேம்பாட்டுக் கட்டணம் மற்றும் பாதுகாப்பு வைப்புத்தொகையை செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு மின் பயன்பாட்டாளருக்கும் குறிப்பிட்ட அளவு மட்டுமே மின்சார லோடு பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளது. இதனை மீறினால், அபராதம் விதிக்கப்படும். உதாரணத்திற்கு, உங்களுக்கு அனுமதிக்கப்பட்ட மின்சுமை 8kW ஆகவும், அதைத் தாண்டி 10kW பயன்படுத்தினால் அபராதம் விதிக்கப்படும். ஒருமுறை லோடு கூடினால் சிக்கல் இல்லை.

அதுவே, ஒரு வருடத்தில் 3 முறை 10kW ஐத் தொட்டால், 10kW உங்கள் இணைப்பு சுமையாக நிர்ணயிக்கப்படும். இதற்கு நீங்கள் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். சமீபத்திய கட்டணத்தின்படி 1 கிலோவாட் 3 கட்ட இணைப்புக்கான மேம்பாட்டுக் கட்டணங்கள் ரூ. 5,110 மற்றும் பாதுகாப்பு வைப்புத் தொகை ரூ. 950/கிலோவாட் ஆகும். இந்த லிமிட்டை தாண்டும் பட்சத்தில் ஒவ்வொரு முறையும் உங்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.

Chella

Next Post

என் வாழ்க்கையே போச்சி, விதவை பெண் காவல் நிலையத்தில், பரபரப்பு புகார்.....! காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை.....!

Mon Sep 18 , 2023
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் ரீதியான துன்புறுத்தல்கள் நாடு முழுவதிலும், அதிகரித்து வருகிறது. இதனை தடுப்பதற்கு, மத்திய, மாநில அரசுகள் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தாலும், இது போன்ற தவறுகள் குறைந்ததாக தெரியவில்லை. அந்த வகையில், சிவகங்கை பகுதியில் செங்கல் சூளையில் வேலை பார்த்து வந்த, கணவனை இழந்த விதவை பெண் ஒருவரை, நான்கு பேர் கொண்ட மர்ம கும்பல் உறங்கிக் கொண்டிருந்தபோது கூட்டு பாலியல் பலாத்காரம் […]

You May Like