மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை சரிசெய்ய உதவும் உணவுப் பொருட்களை இங்கு காணலாம்
அண்ணாச்சி பழம் சாப்பிடுவதால் சிவப்பு மற்றும் வெள்ளை இரத்த அணுக்கள் சுறக்கும். இதனால் மாதவிடாய் காலங்களில் இரத்தப்போக்கு சீராக இருக்கும்.தயிரில் உள்ள கால்சியமனது மாதவிடாய் காலத்தில் உடலின் உள்ள எலும்புகளை வலுப்படுத்த உதவும்.மாதவிடாய் காலத்தில் பெருஞ்சீரக விதையை தண்ணீரில் ஊறவைத்து குடிப்பதன் மூலம் இரத்தப்போக்கின் சூழற்சி சீராக அமையும். மாதவிடாய் காலத்தில் டார்க் சாக்லேட் சாப்பிடுவதன் மூலம் வயிற்று வலி குறையும். மாதவிடாய் காலத்தில் இஞ்சி கஷாயம் வயிற்றில் ஏற்படும் வீக்கத்தை கட்டுப்படுத்த உதவும்.
மாதவிடாயின் போது உடலில் எலும்பு தேய்மானம் எற்படக்கூடும் இதை சீர்செய்ய இரும்பு சத்துக்கள் உடைய கீரை வகைகள் உதவுகிறது.மாதவிடாயின் போது வைட்டமின் பி, இரும்பு சத்து , பொட்டாசியம் போன்ற சத்துக்கள் அதிகமாக தேவைப்படுகிறது. அவை பருப்பு வகைகளில் அதிக அளவு உள்ளது.வாழைப்பழம், மாதவிடாய் சுழற்சியின் போது சிறந்த வலி நிவாரணியாக அமைகிறது