fbpx

இதை ஃபாலோ பண்ணா வீட்டுக்கடனுக்கான காலம் உயராமல் தடுக்க முடியும்..!! கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க..!!

ரிசர்வ் வங்கி அவ்வப்போது ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தி வருகிறது. அப்படி ரெப்போ விகிதத்தை உயர்த்தினால், வங்கிகள் தங்களது வாடிக்கையாளர்களுக்கு வழங்கக்கூடிய கடன்களுக்கான வட்டியை அதிகரிக்கும். அதன்படி, சமீபத்தில் ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தி அறிவித்தது. இதன் காரணமாக ரெப்போ விகிதம் 6.25 சதவீதத்தில் இலிருந்து 6.50% ஆக உயர்ந்துள்ளது. அதோடு வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதமும் அதிகரித்துள்ளது. இதற்கிடையே இஎம்ஐ பிரச்னையிலிருந்து மீண்டு வருவது சாத்தியமா என்றும் கேள்வி எழுந்துள்ளது. ரெப்போ அடிப்படையில் சென்ற வருடம் 6.5% கணக்கில் வாங்கப்பட்ட வீட்டுக் கடன், இப்போது 9 சதவீதமாக அதிகரித்துள்ளது. அந்த வகையில், 20 ஆண்டுகளில் முடியவேண்டிய வீட்டுக் கடன் காலம், 30 வருடங்களை தாண்டுகிறது.

அதே நேரம் மாதாந்திர வட்டியும் அதிகரித்துள்ளது. வாங்கிய கடனுக்குரிய பணத்தை, சிறிது முன்கூட்டியே செலுத்துவதன் மூலம் இந்த சுமையில் இருந்து விடுபடலாம். வீட்டுக் கடனை வாங்க போகும் முன், அதனை எத்தனை வருடங்களுக்குள் திருப்பி செலுத்த வேண்டும் என்பதை முறையாக தீர்மானித்துக் கொள்ள வேண்டும். உதாரணத்திற்கு உங்களது வீட்டுக்கடனுக்கான காலம் 20 வருடங்கள் எனில், அதனை 10 ஆண்டுகளுக்குள் திருப்பிச்செலுத்த வேண்டும். ஏனெனில் வட்டி விகிதம் உயரும்போது, வீட்டுக் கடனுக்கான காலம் 25 வருடங்களாக உயர்ந்து விடும். முன்கூட்டியே கடனை செலுத்தினால் வீட்டுக்கடனுக்கான காலம் உயராமல் தடுக்க முடியும்.

Chella

Next Post

அந்தரங்க விடியோவை நண்பருக்கு அனுப்பி மிரட்டிய கணவன்! துணிச்சலாக போலீசில் புகார் கொடுத்த மனைவி!

Tue Feb 14 , 2023
கோபி அருகே மனைவியுடன் ஆனால் அந்தரங்க காட்சிகளை நண்பர்களுடன் வாட்ஸ் அப்பில் பகிர்ந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் இவர் மத்திய அரசு பணியில் இருப்பதாக கூறி நாடகமாடியதும் விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. பழனி அருகே உள்ள பொட்டம்பட்டியைச் சார்ந்த கட்டின் துறை என்பவரது மகள் அபிதா முதுகலை பட்டதாரியான இவருக்கு கோபி அருகே உள்ள மொடச்சூர் செந்தில்நாதன் நகரைச் சார்ந்த செல்லப்பாண்டி என்பவரது மகன் லிவிங்ஸ்டன் ஜெயபால் […]

You May Like