fbpx

உங்கள் வீட்டில் இடமிருந்தால் கட்டாயம் இந்த மூலிகை செடியை வளருங்கள்..!! ஏராளமான நன்மைகள் கொட்டிக்கிடக்குது..!!

நமது முன்னோர்கள் பல்லாண்டு காலமாக மூலிகைகளை பயன்படுத்தி எளிதில் நலம்பெற உதவும் யுக்திகளை கையாண்டு வந்தனர். இன்று நம்மைச் சுற்றி பல மூலிகைகள் வளர்ந்திருந்தாலும், நமக்கு அதன் பயன்தெரியாது. அதனால் அவற்றைப் பயன்படுத்துவதில்லை. மேலும், முறையாக வளர்த்து தினமும் சிறிய அளவில் பயன்படுத்த வேண்டிய அற்புத மூலிகைகள் பல உள்ளன.

வீட்டைச்சுற்றி இடமிருப்பின் நிலத்திலோ, தோட்டமிருப்பின் ஒரு சிறுபகுதியிலோ மூலிகைப்பூங்கா அமைத்தால் ஊரில் உள்ள அனைவருக்கும் நன்மைகள் கிடைக்கும். வீட்டில் வேலிப்பகுதிகளில் கூட படரவிட சில மூலிகைகள் உதவும். நீர்நிலை இருப்பின் அதில் வளர்த்தும் பயன்படுத்த பல மூலிகைகள் உள்ளன. சர்க்கரை வியாதி உள்ளவர்கள் நமது இன்சுலின் செடி இலைகளைத் தினமும் சாப்பிடலாம். செம்பருத்தி இலைகளை நீரிலிட்டு காய்ச்சி வடிகட்டி கற்கண்டு சேர்த்துப் பருகலாம்.

செம்பருத்திப்பூவை உலர்த்தி பொடித்து பாலில் காலை மாலை பருகலாம். இதயபலவீனம், மார்புவலி குணமாகும். செம்பருத்திப்பூவை நல்லெண்ணெயில் காய்ச்சித் தடவி முடியை பேணலாம். கீழாநெல்லி இலையில் உப்பு சேர்த்து அரைத்து தடவிக் குளிக்க சொறி சிரங்கு நமைச்சல் தீரும், கண்பார்வைக்கும் நல்லது. ரத்த சர்க்கரையை சமன்படுத்திட சிறுகுறிஞ்சான் செடி இலைகள் உதவும். இதன் வேர், காய்ச்சல், இருமல், காசம் தீர்க்க உதவும்.

வல்லாரை இலையை விளக்கெண்ணெயில் வதக்கி நீண்டநாள் கட்டிவர யானைக்கால், விரைவாதம், நெறிக்கட்டி, அறையாப்பு, கண்டமாலை தீரும். இலையை உலர்த்தி பொடிசெய்து 5 அரிசி எடை காலை மாலை நெய்யில் உட்கொள்ளுவதால், வாதம், வாயு, அண்டபித்தம், யானைக்கால், குப்பம், நெறிக்கட்டி, கண்டமாலை மேகரணம், சூதகத்தட்டு போக்கும் மூளை பலத்தையும் அறுசுவையையும் தரும்.

Read More : ”இந்த வகை இனிப்புகளை சாப்பிட்டால் கிட்னி செயலிழந்து விடும்”..!! ”இப்படியெல்லாம் ஏமாத்துவாங்க”..!! உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை..!!

English Summary

Our ancestors have been using herbal remedies for many years to help them get well.

Chella

Next Post

என்ன செய்தாலும் அல்சர் மட்டும் சரியாக மாட்டீங்குதா..? இந்த மூலிகை மருத்துவத்தை டிரை பண்ணி பாருங்க..!!

Wed Oct 30 , 2024
Ulcer is the destruction and damage of tissues in the alimentary canal, stomach, small intestine, colon etc.

You May Like