நாமக்கல் மாவட்ட சுகாதாரத் துறையின் கீழ் மாவட்ட நலவாழ்வுச் சங்கத்தில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மொத்தம் காலியாகவுள்ள 27 இடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் தபால் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்றும் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் நவ.27ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு ரூ.10,500 – ரூ.40,000 வரை சம்பளமாக வழங்கப்படும்.
RBSK Pharmacist :
இந்த பதவிக்கு ஒரு காலியிடம் தான் உள்ளது. இதற்கான கல்வி தகுதி Diploma in Pharmacy கண்டிப்பாகப் படித்திருக்க வேண்டும். சம்பளம் ரூ.15,000 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
Health Inspector Grade II :
இந்த பதவிக்கு 7 காலியிடங்கள் உள்ள நிலையில், 12ஆம் வகுப்பு மற்றும் Multipurpose Health Worker, Health Inspector, Sanitary Inspector Course கண்டிப்பாகப் படித்திருக்க வேண்டும். சம்பளம் ரூ.14,000 வழங்கப்படும்.
ANM UPHC :
இந்த பதவிக்கு 4 காலியிடங்கள் உள்ளது. Auxiliary Nurse Midwife/ Multipurpose Health Worker Course கண்டிப்பாகப் படித்திருக்க வேண்டும். சம்பளம் ரூ.14,000 வழங்கப்படும்.
Dental Assistant :
இந்த பணிக்கு 4 காலியிடங்கள் உள்ளது. 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மற்றும் 2 வருட Dental Surgeon பணி அனுபவம் கண்டிப்பாக இருக்க வேண்டும். சம்பளம் ரூ.13,800 வழங்கப்படும்.
Data Entry Operator :
இந்த பதவிக்கு ஒரு காலியிடம் தான் உள்ளது. இதற்கான கல்வித்தகுதி 12ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும். கணினி இயக்க கண்டிப்பாகப் தெரிந்திருக்க வேண்டும். சம்பளம் ரூ.13,500.
Programme cum Administrative Assistant :
இந்த பதவிக்கும் ஒரு காலியிடம் தான் உள்ளது. கல்வித்தகுதியாக இளங்கலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். கணினி இயக்க கண்டிப்பாகப் தெரிந்திருக்க வேண்டும். சம்பளம் ரூ.12,000.
Tribal Welfare Counselor :
இந்த பதவிக்கும் ஒரு காலியிடம் தான் உள்ளது. கல்விதகுதியாக 10ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும். சம்பளம் ரூ.10,500 வழங்கப்படும்.
தேர்வு செய்யும் முறை : நேர்முகத் தேர்வு
விண்ணப்பிக்கும் முறை : அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள அனைத்து ஆவணங்களுடன் (துணை இயக்குனர் சுகாதாரப் பணிகள்/ நிர்வாகச் செயலாளர், மாவட்ட நலவாழ்வுச் சங்கம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், நாமக்கல் – 637003) என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://cdn.s3waas.gov.in/s3b9228e0962a78b84f3d5d92f4faa000b/uploads/2023/11/2023110958.pdf என்ற இணையதளப் பக்கத்தை பார்க்கவும்.