இந்திய கடற்படையில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் Syrang of Lascars, Lascar-l, Fireman (Boat Crew), Topass பணிக்கென மொத்தம் 327 பணியிடங்கள் காலியாகவுள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் இறுதிநாள் முடிவதற்குள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
காலிப்பணியிடங்கள் : 327
பணியின் பெயர் :
* Syrang of Lascars – 57
* Lascar-l – 192
* Fireman (Boat Crew) – 73
* Topass – 5
கல்வித் தகுதி :
அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
குறைந்தபட்சம் 18ஆகவும், அதிகபட்சம் 25ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சம்பளம் :
Syrang of Lascars : ரூ.25,500 முதல் ரூ. 81,100 வரை சம்பளம் வழங்கப்படும்.
Lascar-l, Fireman (Boat Crew), Topass : ரூ.18,000 முதல் ரூ.56,900 வரை சம்பளம் வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை :
* Screening
* Shortlisting
* எழுத்துத் தேர்வு
விண்ணப்பிக்கும் முறை :
அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று, ஆன்லைன் மூலம் 01.04.2025ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
கூடுதல் விவரங்களுக்கு https://ndmb.boatcrew.registrationportal.in/public/Notification%20of%20Boat%20Crew%20Staff%20-%20BCS%2001-2025.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளலாம்.
Read More : வீரப்பன் மகள் வித்யாராணிக்கு நாம் தமிழர் கட்சியில் முக்கிய பதவி..!! சீமான் வெளியிட்ட அறிவிப்பு