fbpx

’தைரியம் இருந்தால் நீதிமன்றத்தில் வழக்கு தொடரட்டும்’..! அண்ணாமலைக்கு செந்தில் பாலாஜி சவால்..!

ஊடகத்தில் தன் முகத்தை காண்பிக்க வேண்டும் என்பதற்காக அண்ணாமலை தொடர்ந்து பொய் புகார்களை கூறி வருவதாக அமைச்சர் செந்தில் பாலாஜி குற்றம்சாட்டியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, ”ஏழை மக்களை பாதிக்காத வகையிலேயே தமிழ்நாட்டில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார். தமிழ்நாட்டில் 100 யூனிட் வரை இலவசமாக மின்சாரம் வழங்கப்படுவதாகக் கூறிய அவர், அதே நேரம் பாஜக ஆளும் மாநிலங்களான கர்நாடகாவில் 100 யூனிட் மின்சாரத்திற்கு 592 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும், உத்தரப்பிரதேசம், குஜராத்தில் 100 யூனிட்டுக்கு 515 ருபாய் வசூலிக்கப்படுவதாகவும் கூறினார்.

’தைரியம் இருந்தால் நீதிமன்றத்தில் வழக்கு தொடரட்டும்’..! அண்ணாமலைக்கு செந்தில் பாலாஜி சவால்..!

தொடர்ந்து பேசிய அவர், தமிழ்நாடு அரசுதான் இந்தியாவிலேயே மிகக் குறைந்த கட்டணத்தில் பொதுமக்களுக்கு மின்சார சேவையை வழங்கி வருகிறது. தமிழ்நாட்டில்தான் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது. ஏற்கனவே ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின்சார இணைப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில், அடுத்தக்கட்டமாக வரும் செப்டம்பர் முதல் வாரத்தில் மேலும் 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட உள்ளது. சூரிய மின்சக்தி பூங்கா விரைவில் திருவாரூரில் அமைக்கப்பட உள்ளது.

’தைரியம் இருந்தால் நீதிமன்றத்தில் வழக்கு தொடரட்டும்’..! அண்ணாமலைக்கு செந்தில் பாலாஜி சவால்..!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தன் மீது கூறிய ஊழல் குற்றச்சாட்டுக்களை மறுத்த செந்தில் பாலாஜி, தைரியமும் நேர்மையும் இருந்தால் இது தொடர்பாக நீதிமன்றத்தில் அண்ணாமலை வழக்கு தொடரட்டும் என்று சவால் விடுத்தார். அந்த வழக்கை தாம் எதிர்கொள்ள தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார். ஊடகத்தில் தன் முகத்தை காண்பிக்க வேண்டும் என்பதற்காக அண்ணாமலை தொடர்ந்து இதுபோன்ற பொய் புகார்களை தெரிவிப்பதாகவும் செந்தில் பாலாஜி குற்றம்சாட்டினார்”.

Chella

Next Post

ஆண்மையற்றவர் என்பதை மறைத்து திருமணம்..! 200 சவரன் நகையை அபேஸ் செய்த வழக்கில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

Wed Jul 27 , 2022
தான் ஆண்மையற்றவர் என்பதை மறைத்து திருமணம் செய்த நபர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி இறுதி அறிக்கை தாக்கல் செய்ய மதுரை அனைத்து மகளிர் காவல்நிலைய ஆய்வாளருக்கு உயர்நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னை உயர்நீதிமன்ற கிளையில், இர்பானா ரஸ்வீன் என்ற பெண் தனது கணவர் மீதான முதல் தகவல் அறிக்கையில் சில பிரிவுகளை சேர்க்கக்கோரி மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சிவஞானம், “மனுதாரரின் […]
’அவசரப்பட்டியே குமாரு’..!! வரவேற்பு நிகழ்ச்சியில் மணமகன் செய்த காரியம்..!! திருமணத்தை நிறுத்திய மணமகள்..!!

You May Like