fbpx

இந்த செயலிகள் உங்கள் போனில் இருந்தால் உடனே டெலிட் பண்ணுங்க..!! பெரிய ஆபத்து..!!

நிதி மோசடிகளில் இருந்து நுகர்வோரைப் பாதுகாக்கும் நடவடிக்கையாக செப்டம்பர் 2022 மற்றும் ஜனவரி 2024 இடையே Google அதன் Play Store-இல் இருந்து 2,200-க்கும் மேற்பட்ட போலி கடன் செயலிகளை நீக்கியுள்ளது. பொய்யான கடன் செயலிகளை எதிர்த்து ரிசர்வ் வங்கி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு நிதித்துறை இணை அமைச்சர் பகவத் கே காரத் பதிலளித்தார்.

அதில், போலி கடன் செயலிகள் அதிகரித்து வரும் அச்சுறுத்தலைச் சமாளிக்க இந்திய ரிசர்வ் வங்கி போன்ற அரசு மற்றும் ஒழுங்குமுறை அமைப்புகளுக்கு இடையேயான கூட்டு முயற்சிகளை எடுத்துரைத்தார். இந்த ஒத்துழைப்பின் மூலம் கூகுள் ஆயிரக்கணக்கான கடன் செயலிகளை மதிப்பாய்வு செய்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளில் பிளே ஸ்டோரில் இருந்து 4,700 மோசடியான செயலிகளை நீக்கியுள்ளது.

மக்களுக்கான பாதுகாப்பை மேலும் வலுப்படுத்த, கூகுள் பிளே ஸ்டோரில் கடன் செயலிகளுக்கான கட்டுப்பாட்டு கொள்கையை அதிகப்படுத்தியுள்ளது. ஒழுங்குபடுத்தப்பட்ட நிறுவனங்களால் வெளியிடப்பட்ட செயலிகள், ஆர்பிஐ மூலம் அனுமதி பெற்ற கடன் நிறுவனங்கள் மட்டுமே கடன் வழங்குவதற்கு இனி அனுமதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே உங்கள் போனில் இந்த செயலிகள் இருந்தால் அது இயங்காது. ஆனால், சில செயலிகள் இயங்கும் பட்சத்தில் அந்த செயலிகளை தொடர்ந்து பயன்படுத்த கூடாது.

அதில் இருந்து உடனே வெளியேற வேண்டும். இந்த செயலிகள் தொடர்பான புகார்களை ரிசர்வ் வங்கி தொடங்கி சைபர் கிரைம் வரை அளிக்கலாம். அதேபோல் இந்த செயலிகள் சார்பாக விடுக்கப்படும் மிரட்டல்களையும் போலீசாரிடம் புகாராக அளிக்கலாம்” என்று தெரிவித்துள்ளார்.

Chella

Next Post

தை அமாவாசை: முன்னோர்களின் சாபம் நீங்கி நல்ல காரியங்கள் தடையின்றி நடக்கும்!… சிறப்புகளும்! பலன்களும்!

Fri Feb 9 , 2024
நம்முடன் வாழ்ந்து மறைந்த நம்முடைய முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க முடியாதவர்கள் பித்ரு சாபத்திற்கு ஆளாகின்றனர். அப்படி சாபம் பெற்றவர்களுக்கு சுப காரிய தடைகள் நிறைய ஏற்படும். தடைகள் நீங்குவதற்கு நாம் தை அமாவாசை தர்ப்பணம் அளிக்க வேண்டும். இதன் மூலம் முன்னோர்களின் அருளாசியால் எண்ணற்ற நன்மைகள் ஏற்படும். அந்தவகையில் தை அமாவாசையான இன்று காலை 08.05 மணிக்கு தொடங்கி பிப்ரவரி 10 ஆம் தேதி 2024 அன்று அதிகாலை 4:28 […]

You May Like