பொதுவாகவே வாஸ்து சாஸ்திரத்தில் வீடு கட்டுவது மற்றும் பொருட்களை பராமரிப்பது குறித்து பல விஷயங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. வீட்டின் வாஸ்து கெட்டுப் போனால் எதிர்மறை சக்தியின் சுழற்சி அதிகரித்து, வீட்டில் உள்ள அனைவரையும் பாதிக்கிறது. அதே நேரத்தில் சமையலறை தொடர்பான பல வாஸ்து விதிகளும் வாஸ்து சாஸ்திரத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. அதை பின்பற்றுவதன் மூலம் வீட்டில் இருக்கும் வாஸ்து குறைபாடுகளை தவிர்க்கலாம்.
சமையலறையில் சில விஷயங்கள் இருப்பது எதிர்மறை ஆற்றல் மற்றும் குழப்பத்தை ஏற்படுத்தும். ஆகையால், இந்த பொருட்கள் உங்கள் சமையலறையில் இருந்தால் அவற்றை இன்றே தூக்கி எறியுங்கள். சிலருக்கு சமையலறையில் மருந்துகளை வைக்கும் பழக்கம் இருக்கும். வீட்டின் சமையலறையில் மருந்துகளை வைப்பது வீட்டில் உறுப்பினர்களின் ஆரோக்கியத்தில் மோசமான விளைவை ஏற்படுத்தும். ஆகையால், சமையலறையில் மருந்துகளை வைக்க வேண்டாம்.
பிசைந்த மாவை சமையலறையில் நீண்ட நேரம் வைக்கக் கூடாது. பிசைந்த மாவை இரவு முழுவதும் குளிர்சாதன பெட்டி அல்லது சமையலறையில் வைத்திருப்பது, ராகு மற்றும் சனியின் மோசமான விளைவுகளை ஏற்படுத்துவதோடு, வீட்டில் எதிர்மறை ஆற்றலையும் அதிகரிக்கும். சிலர் சமையல் அறையில் அழகுக்காக கண்ணாடியை வைத்திருப்பார்கள். ஆனால், அந்த கண்ணாடியானது வீட்டில் எதிர்மறை ஆற்றலை ஏற்படுத்தும் மற்றும் வீட்டின் மகிழ்ச்சியும் அமைதியும் இது பறித்துவிடும்.
சமையல் அறையில் இருக்கும் அழுக்கு வீட்டில் எதிர்மறை ஆற்றலை ஏற்படுத்துகிறது. அதே சமயம், இரவு நேரங்களில் சமையல் அறையில் கழுவாத பாத்திரங்களை வைக்கவே கூடாது. அப்படி வைத்தால், லட்சுமி தேவி கோபப்படுவதோடு உங்கள் நிதி நிலையும் மோசமடைய கூடும். உடைந்த பாத்திரங்களை வீட்டின் சமையலறையில் வைக்க கூடாது. உடைந்த பாத்திரங்களை பயன்படுத்துவது உங்கள் அதிர்ஷ்டத்திற்கு ஒரு பூட்டு போடுவது போலாகும் மற்றும் செய்யப்படும் வேலையும் கெட்டுவிடும்.
Read More : அக்.15இல் தவெக மாநாடு..? சாலையோரங்களில் சுவர் விளம்பரங்கள்..!! வெளியாகும் அறிவிப்பு..?