fbpx

இந்த அறிகுறிகள் இருந்தால்.. உங்கள் ஸ்மார்ட்போன் ஹேக் செய்யப்பட்டுள்ளது என்று அர்த்தம்..

கடந்த சில மாதங்களாக ஸ்மார்ட்போன் ஹேக் செய்யப்படுவது என்பது இயல்பாகி வருகிறது.. ஹேக் செய்வதன் மூலம் நமது ஸ்மார்ட் போனில் இருக்கும் ஒரு சில செயலிகள், நிதி தொடர்பான தகவல்களைத் திருட முயற்சிக்கக்கூடும் என்று சைபர் பாதுகாப்பு வல்லுனர்கள் எச்சரிக்கின்றனர்.. எனவே உங்கள் போனில் இந்த அறிகுறிகள் இருந்தால், உங்கள் ஸ்மார்ட்போன் ஹேக் செய்யப்பட்டிருக்கலாம் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்..

பேட்டரி வேகமாக குறைந்தால் : உங்கள் தொலைபேசியின் பேட்டரி வழக்கத்தை விட வேகமாக குறைந்து வந்தால், உங்கள் தொலைபேசியில் உளவு செயலிகள் அல்லது உளவு கருவிகள் இருக்கலாம். இருப்பினும், இந்த உளவு கருவிகளைச் சரிபார்க்கும் முன், உங்கள் தொலைபேசியின் பின்னணியில் இயங்கும் செயலிகளைச் சரிபார்க்கவும். பின்னணியில் இயங்கும் பல செயலிகள் பேட்டரியை வேகமாக குறைக்கின்றன. எனவே முதலில் அவற்றை அணைத்து பின்னர் கண்காணிக்கவும்.

பதிவிறக்கம் செய்யாத செயலிகள் : நீங்கள் பதிவிறக்கம் செய்யாத செயலிகளை உங்கள் தொலைபேசியில் இருந்தால், அவை ஹேக்கர்கர்களால் பதிவிறக்கம் செய்யப்பட்டிருக்கலாம். அத்தகைய செயலிகளை உடனடியாக நீக்க வேண்டும். உங்கள் தொலைபேசி மிகவும் மெதுவாக இயங்கினால், உங்கள் தொலைபேசியின் பின்னணியில் திருட்டுத்தனமான தீம்பொருள் இயங்கக்கூடும்.

அதிகப்படியான மொபைல் டேட்டா : உங்கள் தரவு பயன்பாடு திடீரென்று அதிகரித்திருந்தால் அல்லது வழக்கத்தை விட அதிகமாக பயன்படுத்தப்பட்டால் கவனமாக இருக்க வேண்டும். எனவே உங்கள் தொலைபேசியில் உள்ள உளவு செயலிகள் அல்லது மென்பொருள் உங்கள் மொபைல் தரவைப் பயன்படுத்துகின்றன என்பதற்கான அறிகுறி.. ஏனெனில் அவை இணையத்தைப் பயன்படுத்தி உங்கள் செயல்பாடுகளைக் கண்காணிக்கும்.

ஸ்மார்ட்போன் விசித்திரமாக செயல்படுகிறதா..? செயலிகள் தானாக செயலிழக்கிறதா? பல தளங்கள் வழக்கத்தை விட வித்தியாசமாக இருக்கிறதா? இதுவும் உளவு செயலி உங்கள் தொலைபேசியில் செயல்படுகிறது என்பதற்கான அறிகுறியாகும். மேலும் உங்கள் போனின் திரையில் நிறைய பாப்-அப்கள் தோன்றுவதை நீங்கள் கவனிக்கிறீர்கள் என்றால், அது ஹாட்வேர் காரணமாக இருக்கலாம். இது உங்கள் ஸ்மார்ட்போனை விளம்பரங்களால் நிரப்பும் ஒரு வகை மென்பொருள். அத்தகைய இணைப்புகளை ஒருபோதும் கிளிக் செய்ய வேண்டாம்.

புகைப்படங்கள் அல்லது வீடியோக்கள் : உங்கள் புகைப்பட கேலரியில் நீங்கள் எடுக்காத புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இருந்தால் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் உங்கள் போனின் கேமராவை கட்டுப்படுத்தும் செயலி ஏதாவது இருக்கக்கூடும் என்பதற்கான அறிகுறியாகும். இதே போல் நீங்கள் உங்கள் தொலைபேசியைப் பயன்படுத்தாதபோது ​​கூட, ஃபிளாஷ் லைட்டிங் தொடர்ந்து ஆன் செய்யப்பட்டிருந்தாலும் யாராவது உங்கள் சாதனத்தை முழுமையாகக் கட்டுப்படுத்துகிறார்கள்.

உங்கள் தொலைபேசி அதிகமாக சூடானால் : நீண்ட நேரம் கேமிங் செயலிகளை இயக்குதல் போன்றவை காரணமாக உங்கள் போன் அதிகமாக சூடாகிறது. இருப்பினும், உங்கள் தொலைபேசி பயன்பாட்டில் இல்லாதபோதும் மிகவும் சூடாக இருந்தால், ஹேக்கர்கள் உங்கள் போனை ஹேக் செய்திருக்கலாம்..

அழைப்பு அல்லது மெசேஜ்கள் : நீங்கள் அனுப்பாத மெசேஜ்கள் அல்லது அழைப்புகளின் பதிவை பார்த்தால் கவனமாக இருங்கள்.. உங்கள் தொலைபேசியை ஹேக்கர்கள் பயன்படுத்துகிறார்கள் என்பதற்கான அடையாளமாக இருக்கலாம்.

Maha

Next Post

ஜெயலலிதா மரண இறுதி விசாரணை அறிக்கை..! முதலமைச்சர் முக.ஸ்டாலின் அதிரடி உத்தரவு..!

Sat Aug 27 , 2022
ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை அறிக்கையை ஆகஸ்ட் 29ஆம் தேதி அமைச்சரவைக் கூட்டத்தில் தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பலரும் தெரிவித்த நிலையில், கடந்த 2017ஆம் ஆண்டு செப்டம்பர் 25ஆம் தேதி ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையத்திற்கு இதுவரை 14 முறை அவகாசம் நீட்டிக்கப்பட்டது. தற்போது 5ஆண்டுகளுக்குப் பிறகு இன்று முதலமைச்சர் முக.ஸ்டாலினிடம் இறுதி […]
ஜெயலலிதா மரண விசாரணை அறிக்கை..! யார் மீது சந்தேகம்..? ஆறுமுகசாமி பரபரப்பு பேட்டி

You May Like