fbpx

துளசி செடி இருந்தா இதை கண்டிப்பா பண்ணுங்க!! நன்மை வீடு தேடி வரும்!!

மருத்துவ குணங்களின் அரசியாக விளங்கும் துளசி ஆயுர்வேதத்தில் மட்டும் இல்லை, ஜோதிடத்திலும் கூட மிகப்பெரிய பங்கை வகிக்கிறது. மேலும் இந்த மதத்தில் துளசி செடி புனிதமாக கருத்தப்படுகிறது.

ஒவ்வொரு இந்துக்களின் வீடுகளிலும் கண்டிப்பாக துளசி செடி இருக்கும். மத நம்பிக்கையின்படி, தினமும் துளசியை வழிபடுவது நன்மை பயக்கும் விஷயமாக பார்க்கப்படுகிறது. வீட்டைச் சுற்றி துளசி செடிகளை நடுவதால் நேர்மறை ஆற்றல் கிடைக்கும் என்றும் துளசி செடியை நடுவது லட்சுமி தேவியை மகிழ்விக்கும் செயல் என்றும் சொல்லப்படுகிறது. இதில் முக்கியமானது என்னவென்றால், துளசி செடியை வாஸ்து பார்த்து நடுவதுதான்.

தினமும் காலையில் துளசி செடிக்கு தண்ணீர் தர்ப்பணம் மற்றும் விளக்கேற்றி பூஜை செய்வது நல்லது எனக் கூறப்படுகிறது. அதே சமயம் துளசி இலைகள் மட்டும் அல்ல, அதன் மஞ்சரி, தண்டு மற்றும் வேர்கள் கூட நமக்கு பல்வேறு பலன்களை வழங்கும். அந்த வகையில், மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ துளசி செடிக்கு செய்யக்கூடிய பரிகாரங்கள் என்னென்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

துளசி செடி பரிகாரங்கள்:

1) ஜோதிட சாஸ்திரப்படி, உங்கள் வீட்டில் நீண்ட நாட்களாக பிரச்னைகள் அதிகரித்தால், நான்கைந்து துளசி இலைகளை எடுத்து, கழுவி சுத்தம் செய்யவும். அதன் பிறகு, ஒரு பித்தளை பானையில் சுத்தமான தண்ணீரை எடுத்து, அதில் துளசி இலைகளை போட்டு, தினமும் காலை குளித்த பின்னர், அந்த நீரை வீட்டு வாசலில் தெளித்தால், வீட்டில் எதிர்மறையான எண்ணங்கள் நீங்கி, மகிழ்ச்சி அதிகரிக்கும்.

2) துளசி செடியில் மஞ்சரி இருப்பது ஐஸ்வர்யம். விஷ்ணுவுக்கு துளசி இலைகளுடன் துளசி மஞ்சரியை சமர்பிப்பதன் மூலம் நிறுத்தப்பட்ட பணத்தை திரும்பப் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். மேலும், வருமானம் கூடும். கங்கை நீரில் துளசி இலைகளை கலந்து வீட்டின் வடக்கு திசையில் வைத்து, இந்த நீரை தொடர்ந்து வீடு முழுவதும் தெளித்து வர, எதிர்மறை ஆற்றல் நீங்கும்.

3) ஜோதிட முறைப்படி துளசி செடிக்கு தண்ணீர் தர்ப்பணம் செய்து வந்தால், மனித வாழ்வில் உள்ள பிரச்னைகள் மற்றும் எதிர்மறை எண்ணங்கள் நீங்கி, மன அமைதியும் கிடைக்கும். இதற்கு அமாவாசை அன்று குளித்த தண்ணீரில் துளசி மரத்துண்டை போட்டு சிறிது நேரம் விட வேண்டும். சிறிது நேரம் கழித்து, இந்த மரத்தை வெளியே எடுத்து ஒரு சுத்தமான இடத்தில் வைத்து, இந்த தண்ணீரில் குளிக்கவும்.

4) சில உலர்ந்த துளசி இலைகளை எடுத்து, சுத்தமான சிவப்பு நிற துணியில் கட்டி, உங்கள் பணத்தை சேமிக்கும் இடத்தில் அல்லது பெட்டகத்தில் வைக்கவும். இதைச் செய்வதன் மூலம், லட்சுமி தேவியின் ஆசிகள் நிலைத்து, மனிதனின் பொருளாதார முன்னேற்றத்திற்கான வழி கிடைக்கும் என்று ஜோதிட சாஸ்திரத்தின்படி சொல்லப்படுகிறது.

5) ஒருவரின் ஜாதகத்தில் ஏதேனும் கிரக தோஷம் இருந்தால் அதற்கு துளசியை வழிபட்டு அதில் இருந்து சிறிது வேரை எடுக்கவும். இப்போது அதை ஒரு சிவப்பு நிற துணியில் கட்டி அல்லது ஒரு தாயத்தில் வைத்து அதை உங்கள் கையில் கட்டவும். இந்த பரிகாரம் விரைவில் கிரக தோஷங்கள் நீங்கும்.

Read More: சனி பகவானின் அருளால் இந்த ராசிக்காரர்களுக்கு பண மழை கொட்டும்..!! உங்களை எப்போதும் கைவிட மாட்டார்..!!

Rupa

Next Post

11 ஆண்டுகால திருமண வாழ்க்கை முடிந்தது!… ஜி.வி.பிரகாஷ் - சைந்தவி அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Tue May 14 , 2024
GV Prakash – Saindhavi: தமிழ் திரையுலகில் நட்சத்திர தம்பதிகளாக கடந்த 11 ஆண்டுகளாக இருந்து வந்த இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் – பின்னணி பாடகி சைந்தவி ஆகியோர் பிரிந்து வாழ்வதென முடிவு எடுத்துள்ளனர். தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான இசையமைப்பாளராக ஜி.வி. பிரகாஷ் இருந்து வருகிறார். அத்துடன் நடிகர், பாடகர் என பல துறைகளில் தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி ஏராளமான ரசிகர்களை ஜிவி பிரகாஷ் பெற்றுள்ளார். சிறு வயது […]

You May Like