fbpx

”போட்டியில் தோற்றால் உடனே கொலை”..!! ரசிகர்கள் எதிர்பார்த்த ஸ்குவிட் கேமின் 2-வது சீசனின் ட்ரெய்லர் வெளியானது..!!

பிரபல தென் கொரிய தொடர் ‘ஸ்குவிட் கேம்’-ன் இரண்டாவது சீசனின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியான கொரியன் இணையத் தொடர் ‘ஸ்குவிட் கேம்’. கடனில் இருப்பவர்களிடம் பேசி ஒரு விளையாட்டை அறிமுகம் செய்கிறார்கள் சிலர். இதில், விளையாட சம்மதிப்பவர்களை அடையாளம் தெரியாத இடத்தில் அடைத்து வைத்து ஒரு குழு விளையாட்டை நடத்துகிறது.

இந்த விளையாட்டில் வெற்றி பெறுபவர்களுக்கு பெருந்தொகை வழங்கப்படும். தோல்வி அடைந்தால், அவர்கள் உடனே கொல்லப்படுவார்கள். ஒரு சிறிய கதைக் கருவை வைத்து உருவாக்கப்பட்ட இந்த தொடருக்கு தற்போது உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கின்றனர். ஆங்கிலத்தில் வெளியாகி இந்தியாவிலும் பெரிய வெற்றியைப் பதிவு செய்த ‘ஸ்குவிட் கேம்’ தொடர் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளிலும் வெளியானது. 

அதன்படி, ஸ்குவிட் கேம்’-ன் இரண்டாவது சீசன் உருவாகி வருகிறது. இந்த சீசன் டிசம்பர் 26ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸில் வெளியாகவுள்ளது. சமீபத்தில் இரண்டாவது சீசனின் புதிய டீசர் வெளியாகி வைரலானது. தற்போது இந்த தொடரின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. இந்த தொடரின் 3-வது சீசன் 2025ஆம் ஆண்டு வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Read More : ரேஷன் அரிசியை இப்படி விற்பனை செய்றீங்களா..? இனி சிக்கினால் குடும்ப அட்டை ரத்து..!!

English Summary

The trailer for the second season of the popular South Korean series ‘Squid Game’ has been released.

Chella

Next Post

171 ஆண்டுகளுக்கு முன்பு 400 பயணிகளுடன் இயங்கிய முதல் ரயில் பயணம்.. இந்தியாவில் எந்த மாநிலத்தில் தெரியுமா..?

Wed Nov 27 , 2024
India's first railway station: Where country’s first train journey started

You May Like