fbpx

உங்கள் வீட்டு பீரோவை எந்த திசையில் வைத்தால் பணம் சேரும்..? தப்பி தவறி இந்த தவறை மட்டும் பண்ணிடாதீங்க..!!

பணம், நகை, உடைகளை வைப்பதற்காக நம் அனைவரது வீட்டிலும் பீரோ இருக்கும். பீரோவில் பணம் வைத்தால் மகாலட்சுமி தயார் அங்கு வாசம் செய்வார் என்பது ஐதீகம். பண வரவு அதிகரிக்க, செல்வ செழிப்புடன் வாழ நம் வீட்டு பீரோவை எந்த திசையில் வைக்க வேண்டும் என்பதையும் கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்.

பீரோவை கிழக்கு அல்லது வடக்கு பார்த்தவாறு வைப்பதால், பணம் விரையம் ஆகாமல் வரவு அதிகரிக்கும். அதாவது பீரோவின் கதவு திறக்கும் பக்கம் கிழக்கு அல்லது வடக்கு பார்த்தவாறு இருக்க வேண்டும். தப்பி தவறியும் தெற்கு பார்த்தவாறு பீரோவை வைத்து விடாதீர்கள். இதனால் நீங்கள் எவ்வளவு தான் கஷ்டப்பட்டு லட்சம் லட்சமாக சம்பாதித்தாலும் அவை அனைத்தும் கற்பூரம் காற்றில் கரைவது போல் கரைந்து விடும்.

பீரோவை மட்டுமின்றி, அதனுள் வைக்கும் பணத்தையும் திசை பார்த்து தான் வைக்க வேண்டும். பீரோவில் வைக்கும் பணத்தை கிழக்கு அல்லது மேற்கு பார்த்தவாறு வைத்தால் அதன் வரவு அதிகரிக்கும். மேலும், பீரோவை சுவரை ஒட்டியவாறு வைக்கக் கூடாது. பீரோவிற்கும் சுவருக்கும் இடையே சற்று இடைவெளி இருக்க வேண்டும். அவ்வாறு இருந்தால் தான் அடைப்பு இல்லாமல் காற்றோட்டம் இருக்கும். இவ்வாறு இருந்தால் தான் பணம் வந்து சேர்வது தடைபடாமல் இருக்கும்.

Chella

Next Post

மத்திய அரசு அதிரடி: "ஊடுருவலை தடுக்க இந்திய - மியன்மார் எல்லையில் பாதுகாப்பு வேலிகள்.." உள்துறை அமைச்சர் அமித்ஷா தகவல்.!

Sat Jan 20 , 2024
மியான்மார் நாட்டில் நடைபெற்று வரும் உள்நாட்டு போரின் காரணமாக மியான்மாரில் இருந்து தப்பி வரும் ராணுவ வீரர்கள் இந்திய எல்லைக்குள் நுழைவதை தடுக்கும் வகையில் தடுப்பு வேலிகள் அமைக்கப்படும் என இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்திருக்கிறார். புதிதாக அமைக்கப்பட்ட அசாம் கமாண்டோ பட்டாலியன் படை பிரிவினரின் அணிவகுப்பு விழாவில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய அமித்ஷா மியான்மார் நாட்டில் இருந்து இந்திய எல்லைக்குள் ஊடுருவும் நபர்களை தடுப்பதற்காக இந்தியா […]

You May Like