fbpx

இங்கு தங்கினால் லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்கலாம்..!! எந்தெந்த இடங்கள் தெரியுமா?

ஒரு அழகான இடத்திற்குச் செல்லும்போது, ​​​​அங்கே கொஞ்ச நாள் தங்க வேண்டும் என்று நினைப்பது  அனைவருக்கும் தோன்றுவது தான். அத்தகைய இடங்களில் குடியேறுவதற்கான செலவுகளும் மிக அதிகமாக இருக்கும். அதனாலேயே அந்த எண்ணத்தை அப்படியே குழிதோண்டி புதைத்துவிடுவோம். ஆனால், உலகின் சில சிறந்த இடத்தில் தங்குவதற்கு அந்த நாடே உங்களுக்கு பணம் கொடுத்தால், அது எவ்வளவு நன்றாக இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள்…!! அத்தகைய 5 இடங்களைப் பற்றி தான் இந்தப் பதிவில் பார்க்க இருக்கிறோம்.

இந்த பட்டியலில் முதலில் இருப்பது ஒரு இத்தாலிய நகரம். இத்தாலி அருகே ப்ரெசிஸ் (Presicce) என்ற இடத்தில் குடியேறுவதற்கு சுமார் ரூ.25 லட்சம் அந்த நாட்டின் அரசே உங்களுக்கு கொடுக்கிறது. இங்கு பெரும்பாலானோர் வயதானவர்கள் என்பதால் மக்கள் தொகை பெருகவில்லை. மக்கள் தொகையை அதிகரிக்க தான் இந்த ஐடியா.

இரண்டாவது இடத்தில் உள்ளது கிரேக்க தீவு ஆன்டிகிதெரா (Antikythera) ஆகும். யாராவது இங்கு குடியேற முடிவு செய்தால், அடுத்த 3 ஆண்டுகளுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.50 அரசு அவருக்கு வழங்கும். தற்போது இந்த தீவில் 50 பேர் மட்டுமே வசிக்கின்றனர். அதனால் இந்த தீவில் கூட்டம் இல்லாமல் ஜாலியாக வாழலாம்.

இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது சுவிட்சர்லாந்தை சேர்ந்த அல்பினென் (Albinen) என்ற சிறிய கிராமம். இந்த கிராமத்தில் குடியேறும் 45 வயதுக்குட்பட்டவர்களுக்கு அரசு ரூ.20 லட்சமும், தம்பதிகளுக்கு ரூ.40 லட்சமும் வழங்குகிறது. இது தவிர குழந்தைகள் இருந்தால் ஒரு குழந்தைக்கு ரூ.8 லட்சம் வழங்கப்படுகிறது. 10 ஆண்டுகளுக்கு இந்த இடத்தை விட்டு வெளியேற கூடாது என்பது மட்டும் தான் நிபந்தனை.

இந்த பட்டியலில் உள்ள நான்காவது இடம் அமெரிக்காவில் உள்ள அலாஸ்கா. பனி மற்றும் குளிரால் இங்கு வாழ்பவர்கள் குறைவு. ஆனால் இங்கு தங்குபவருக்கு ஆண்டுதோறும் ஒன்றரை லட்சம் ரூபாய் அரசால் வழங்கப்படுகிறது. குறைந்தபட்சம் 1 வருடமாவது இங்கு தங்க வேண்டும்.

ஐந்தாவது இடத்தில இருப்பது ஸ்பெயினில் உள்ள பொங்கா என்ற கிராமம். மக்கள் தொகை குறைந்த இத்தகைய சூழ்நிலையில், பொருளாதாரத்தை அதிகரிக்கவும், இளம் குடிமக்களை ஈர்க்கவும், ஒவ்வொரு தம்பதியருக்கும் இங்கு குடியேற உள்ளூர் அதிகாரிகளால் 1.5 லட்சம் ரூபாய் வழங்கப்படுகிறது. இங்கு வசிக்கும் போது குழந்தைகள் பிறந்தால், குழந்தைகளுக்கும் 2 லட்சம் ரூபாய் வரை வழங்கப்படுகிறது.

Chella

Next Post

14 மொபைல் மெசெஞ்சர் செயலிகள் முடக்கம்..!! மத்திய அரசு அதிரடி..!! என்ன காரணம் தெரியுமா..?

Mon May 1 , 2023
பயங்கரவாதிகள் பயன்படுத்தியதாக கூறப்படும் 14 மொபைல் செயலிகளை முடக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதம் மற்றும் அமைதியின்மையைக் கட்டுப்படுத்தும் முயற்சியாக, தகவல்களைச் சேகரித்துப் பரப்புவதற்குப் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் பயன்படுத்தியதாகக் கூறப்படும் 14 மொபைல் செயலிகளை முடக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த மொபைல் அப்ளிகேஷன்களை காஷ்மீரில் உள்ள பயங்கரவாதிகள் தங்கள் ஆதரவாளர்கள் மற்றும் தரைமட்ட பணியாளர்களுடன் தொடர்பு கொள்ள பயன்படுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. […]

You May Like