இனி செல்போன் எடுத்து பேசும்போது ஹலோ என சொலலாமல் அதற்கு பதில் வந்தே மாதரம் என்றுதான் கூற வேண்டும் என்று அரசு ஊழியர்களுக்கு மகாராஷ்டிரா முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக அரசு ஊழியர்கள் அனைவருக்கும் சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்களிடம் இருந்து அழைப்புகளை ஏற்று பதில் கூறும்போது அவர்களிடம் ’ஹலோ ’’ என கூறாமல் ’வந்தே மாதரம் ’’ என கூற வேண்டும். இது அரசு உள்ளாட்சி அமைப்புகள் , அரசு உதவி பெறும் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பிற நிறுவனங்களுக்குப் பொருந்தும் என கூறப்பட்டிருக்கின்றது.
மேலும் அந்த அறிக்கையில் ஹலோ என்ற வார்த்தை அர்த்தமற்றது எனவும் வந்தே மாதரம் என தொடங்கும்போது நேர்மறையான சூழ்நிலையை உருவாக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த புதிய உத்தரவை பா.ஜ பாராட்டியுள்ளது. சமாஜ்வாடி கட்சியினர் இதுமக்களை பிளவுபடுத்தும் செயல் என தெரிவித்துள்ளது. பா.ஜ.கவின் அழுத்தத்தால் ஏக்நாத் ஷிண்டே இதுபோன்ற அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றார் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.