fbpx

”யாரிடமாவது சொன்னால் கொன்றுவிடுவேன்”..!! 13 வயது சிறுமியை மிரட்டி அடிக்கடி பலாத்காரம்..!!

பள்ளியில் படிக்கும் 13 வயது சிறுமியை மிரட்டி அடிக்கடி உடலுறவு வைத்துக் கொண்ட இருவரை போலீசார் கைது செய்தனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு பகுதியைச் சேர்ந்தவர் 13 வயது சிறுமி. இவர் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவரது தந்தை கார் டிரைவராகவும், தாய் தனியார் கம்பெனியிலும் வேலை பார்த்து வருகிறார். தம்பதியினர் தினமும் காலையில் வேலைக்கு சென்றுவிட்டு இரவு வீடு திரும்புவது வழக்கம். இதையறிந்த அதே பகுதியைச் சேர்ந்த முனியாண்டி (37) என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டின் சுவர் மீது ஏறி குதித்து, தனியாக இருந்த சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

மேலும் ‘யாரிடமாவது சொன்னால், உனது தாய், தந்தையை கொன்றுவிடுவேன்’ என மிரட்டி உள்ளார். இதையடுத்து, பலமுறை சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதையறிந்த அப்பகுதியில் பெட்டிக்கடை வைத்திருக்கும் சந்திரன் (55) என்பவரும், சிறுமியை மிரட்டி உடலுறவு வைத்துள்ளார். இந்நிலையில், சிறுமி சோர்வாக இருப்பதை கவனித்த அவரது பெற்றோர் இதுகுறித்து விசாரித்தனர். அப்போது, சிறுமி நடந்த சம்பவங்களை கூறி கதறி அழுதார். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், ராணிப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

புகாரின் அடிப்படையில், இன்ஸ்பெக்டர் ஷாகின், சப்-இன்ஸ்பெக்டர் சீதா ஆகியோர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து முனியாண்டி, சந்திரன் ஆகிய 2 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். கைதானவர்களில் சந்திரனுக்கு திருமணமாகி 2 மகன்களும், முனியாண்டிக்கு 2 மகள்களும் உள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Chella

Next Post

தென்காசி அருகே நகராட்சி அலுவலக வாசலில் நடைபெற்ற பயங்கரம்…..! திமுக பிரமுகரின் மகன் வெட்டி படுகொலை…..!

Thu Jun 15 , 2023
தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள விஸ்வநாதபுரம் பகுதியில் சேர்ந்தவர் சென்ட்ரிங் காண்ட்ராக்டர் முருகன் இவருடைய மனைவி தமிழ்ச்செல்வி திமுகவின் செயற்குழு உறுப்பினராக இருக்கிறார். இவர் ஏற்கனவே தென்காசி மாவட்டம் தென்காசி ஒன்றிய குழு தலைவராக பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவருடைய மூத்த மகன் ராஜேஷ் செங்கோட்டை நகராட்சி அலுவலகத்தில் மத்திய அரசின் சுகாதாரத் தூய்மை பணிகள் திட்டத்தின் மேற்பார்வையாளராக தற்காலிகமாக பணி புரிந்து வருகிறார். இத்தகைய நிலையில், […]

You May Like