விழுப்புரம், பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் பேருந்து படிக்கட்டுகளில் தொங்கிக் கொண்டு சென்றால், மாணவர்கள் மட்டுமின்றி, அவர்களின் பெற்றோரின் மீதும் நடவடிக்கை எடுக்க போவதாக எஸ்.பி ஸ்ரீநாதா எச்சரித்துள்ளார்.
பேருந்து படிக்கட்டுகளில் தொங்கிக் கொண்டு பயணம் செய்தால் மாணவர்களை மட்டுமல்லாமல், அவர்களின் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோரின் மீதும் நடவடிக்கை எடுக்க இருப்பதாக விழுப்புரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா எச்சரிக்கை செய்துள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறியதாவது;-
இந்த ஆபத்தான பயணம் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.மேலும் அதிக பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். படிக்கட்டில் பயணம் செய்தால் மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். ஆசிரியர் மற்றும் பெற்றோர் மீதும் நடவடிக்கை எடுக்க இருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.