fbpx

இந்த மாதிரி AC-யை பயன்படுத்தினால் கரண்ட் பில் அதிகம் வராது..!! சூப்பர் டிப்ஸ் இதோ..!!

வெயில் காலம் வந்த உடன் உடலில் நீர் சத்து வெளியேறுவதை தடுக்கவும், உடல் வெப்ப நிலையை குறைக்கவும் நாம் பல்வேறு விஷயங்களை செய்கிறோமோ, அதுபோல் வெயில் காலம் வந்தால் மின்சாரம் வழக்கத்தைவிட 3 மடங்கு அதிகம் ஆக வாய்ப்பு உள்ளது. ஏசி, ஃபேன், பிரிட்ஜ் பயன்பாடு போன்றவை அதிகமாக இருக்கும் என்பதால் மின் கட்டணம் அதிகமாகும் வாய்ப்புள்ளது. எனவே வெயில் காலத்தில் மின்கட்டணத்தை குறைக்க வேண்டும் என்றால் அதற்கு சில சிக்கன நடவடிக்கைகளை நாம் செய்தாக வேண்டும்.

வெயில் காலம் என்பதால் ஏசி பயன்பாடு அதிகரிக்கும். எனவே, தேவையற்ற நேரங்களில் ஏசியை கண்டிப்பாக ஆஃப் செய்துவிட வேண்டும். பலரும் ஏசியை மெயின் சுவிட்சை அணைக்காமல், ரிமோட்டில் மட்டும் ஆஃப் செய்வார்கள். ஆனால், அப்படி செய்யக்கூடாது. ஏசியை பயன்படுத்தாத போது மெயின் சுவிட்சை அணைக்க வேண்டும். அதேபோல் சரியான வெப்பநிலையில் ஏசியை இயக்க வேண்டும். 24 டிகிரி வெப்ப நிலை மனித உடலுக்கான ஐடியல் வெப்பநிலை.

இப்படி 24 சதவீதத்தில் ஏசியை இயக்கினால், 6 சதவீதம் வரை மின்சாரத்தை சேமிக்கலாம். எனவே, வீட்டிற்கு வந்த உடன் உடல் வெப்ப நிலையை குறைக்க 16 அல்லது 18 டிகிரி வைப்பதற்கு பதிலாக 24 டிகிரியில் ஏசி இயக்கினால் நல்லது. அதேபோல் நீண்ட நாள் பயன்படுத்தாமல் கோடைக்காலத்தில் ஏசியை பயன்படுத்தும் முன்பு கண்டிப்பாக சர்வீஸ் செய்ய வேண்டும். ஏசி சர்வீஸ் செய்தால் மின்சாரத்திற்கு செலவு குறைவதுடன், குளிர்ந்த காற்றைக் கொடுக்க அதிகமாக செயல்பட வேண்டிய அவசியம் இருக்காது.

ஏசியை போட்டுவிட்டு அடிக்கடி ஜன்னல் மற்றும் கதவுகளை திறப்பது நல்லதல்ல. அப்படி செய்தால் குளிர்ந்த காற்று அறையை விட்டு வெளியேறிவிடும். இதனால், அறை குளிர்ச்சியாக அதிக நேரம் எடுக்கும் என்பதால் மின் நுகர்வு அதிகரித்து மின் கட்டணம் அதிகரிக்கும். மேலும், இரவில் தூங்கும்போது ஸ்லீப்பிங் மோடில் பயன்படுத்தவும். அதேபோல் ஏசியை பயன்படுத்தும் போது மின் விசிறியை பயன்படுத்தினால் விரைவாக அறை குளிர்ந்து விடும். ஏசியின் குளிர்ந்த காற்றை அறை முழுவதும் மின் விசிறி வேகமாக பரப்பிவிடும். எனவே, இது AC இயந்திரத்தின் நேரத்தையும் மிச்சப்படுத்த உதவும்.

அதேநேரம் மிக குறைவான நேரம் மட்டும் மின் விசிறியை இயக்கினாலே போதும்.. ஏசியை பொறுத்தவரை இப்போது மின்சாரத்தை சேமிக்கும் வகையில் இன்வெர்ட்டர் ஏசிகள் விற்பனைக்கு வந்துள்ளன. மின்சாரத்தை அதிகம் சேமிக்கும் அதேநேரம் பராமரிப்பு அதிகம் தேவைப்படாத ஏசியாக பார்த்து வாங்க வேண்டும். ஏசியை பொறுத்தவரை பொருளாதாரம் மற்றும் ஸ்லீப் போன்ற பல்வேறு மோடுகளை சரியாக பயன்படுத்தினால், மின்சாரத்தை நிச்சயம் சேமிக்கலாம். இதை பற்றி ஏசி வாங்கும் போதே கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.

Read More : பெல்ட் அணிவதால் இவ்வளவு பிரச்சனைகளா..? இனிமேல் ஜாக்கிரதையா இருங்க..!!

Chella

Next Post

Cocaine: நேற்று 28 கோடி இன்று 35 கோடி! தொடரும் போதைப் பொருள் கடத்தல்! 

Thu Apr 25 , 2024
சென்னை விமான நிலையத்தில் நேற்று ரூ. 28 கோடி மதிப்புடைய போதை பொருள் பறிமுதலான நிலையில், இன்று மேலும் ரூ‌.35 கோடி மதிப்புடைய போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து, சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு இன்று காலை ஏர் ஏசியா பயணிகள் விமானம் ஒன்று வந்தது. அதில் வந்த பயணிகளை, சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள் பரிசோதித்தனர். அப்போது அந்த விமானத்தில் கம்போடியா நாட்டிலிருந்து […]
கோவாவுக்கு சுற்றுலா சென்ற புதுச்சேரி மாணவன்..! அதிகளவு போதைப்பொருள் உட்கொண்டதால் மரணம்..!

You May Like