fbpx

’உங்களுக்கு சம்பளம் வேணும்னா உடனே இதை பண்ணுங்க’..!! ’டைம் இல்ல இன்னைக்கே முடிங்க’..!!

கிராமப்புற மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் நோக்கில், கடந்த 2006ஆம் ஆண்டு தொடங்கப்பட்டதுதான் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம். இது பெரும்பாலும் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் என்றும் அழைக்கப்படுகிறது. குளங்களை தூர்வாருவது, கால்வாய்களை பராமரிப்பது உள்ளிட்ட அரசு சார்ந்த பணிகளுக்கு 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் வேலைபார்க்கும் பணியாளர்களுக்கு இரண்டு முறைகளில் ஊதியம் வழங்கப்பட்டு வந்தது. ஒன்று வங்கிக் கணக்கு அடிப்படையிலும், மற்றொன்று ஆதார் கணக்கு அடிப்படையிலும் வழங்கப்படுகிறது. இந்நிலையில், கடந்த ஜனவரி 30ஆம் தேதியன்று மத்திய ஊரக மேம்பாடு அமைச்சகம், அனைத்து மாநில அரசுகளுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியிருந்தது.

அதில், 2023 பிப்ரவரி 1ஆம் தேதி முதல் 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் ஊதியம் பெற ஆதார் எண்ணை கொண்டு பணம் செலுத்தும் முறைகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆகையால், வங்கிக் கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்காதவர்களுக்கு ஊதியம் வழங்கப்பட மாட்டாது என்றும் திட்டவட்டமாக தெரிவித்திருந்தது. ஆனாலும், மாநில அரசுகளின் வேண்டுகோளுக்கிணங்க இந்த கால வரம்பு இரண்டு முறை நீட்டிக்கப்பட்டது.

அந்த வகையில், வரும் 31ஆம் தேதி அதாவது, நாளையே கடைசி தேதியாகும். அதனால், நாளைக்குள் வங்கிக்கணக்கை ஆதார் எண்ணுடன் இணைத்து, இணைக்கப்பட்ட வங்கிக்கிளை அலுவலகத்துக்கு சென்று உரிய விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும் என்றும் அப்படி செய்யாதவர்களுக்கு ஊதியம் வழங்கப்பட மாட்டாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

ரூ.15,000 ஊதியத்தில் தனியார் வங்கியில் வேலைவாய்ப்பு...! விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்...!

Wed Aug 30 , 2023
பேங்க் ஆப் பரோடா வங்கி காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. வங்கியில் Business Supervisors பணிகளுக்கு என 4 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் நபர்கள் 45 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும். அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாத ஊதியமாக ரூ.15,000 வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்ப கட்டணம் ஆன்லைன் வழியாக செலுத்த வேண்டும். ஆர்வம் […]
இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க..!! தனியார் வங்கிகளில் வேலைவாய்ப்பு..!! என்ன செய்ய வேண்டும்..?

You May Like