fbpx

இயேசுவை சந்திக்கணும்னா இப்படி பண்ணுங்க..!! உள்ளூர் போதகரால் உயிரை விட்ட 4 பேர்..!! பலர் கவலைக்கிடம்..!!

கென்யாவில் இயேசுவை சந்திக்க காட்டில் உண்ணாவிரதம் இருந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

கென்யாவின் கடலோர கிலிஃபி கவுண்டியில் இயேசுவை சந்திக்க காட்டில் உண்ணாவிரதம் இருந்து, சர்ச்சைக்குரிய வழிபாட்டில் ஈடுபட்ட 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், பலர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குட் நியூஸ் இன்டர்நேஷனல் தேவாலயத்தின் நான்கு வழிபாட்டாளர்கள் மகிரினி (Magarini) தொகுதியின் ஷகாஹோலா கிராமத்தில் உணவு மற்றும் தண்ணீர் உட்கொள்ளாமல் பல நாட்களாக உண்ணாவிரதம் இருந்த நிலையில் உயிரிழந்துள்ளனர் என நியூஸ்வீக் செய்தி வெளியிட்டுள்ளது.

உள்ளூர் போதகர் ஒருவர், இயேசுவை சந்திக்க உண்ணாவிரதம் இருக்க வேண்டும் என கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து குழு ஒன்று பல நாட்கள் அந்த காட்டில் உணவு உண்ணாமல் வாழ்ந்து வந்துள்ளனர் என காவல்துறை தரப்பு கூறியுள்ளது. வழிபாடு நடைபெறுவது தொடர்பான ரகசிய தகவல் கிடைத்த உடன், காட்டுப் பகுதிக்குள் சோதனையிட்ட போலீசார், உண்ணாவிரதப் பயிற்சியில் ஈடுபட்ட 15 பேரை கண்டறிந்தனர். அதில் 4 பேர் உயிரிழந்த நிலையில், 11 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குட் நியூஸ் இன்டர்நேஷனல் தேவாலயத்தின் தலைவரான மக்கென்சி என்தெங்கே (Makenzie Nthenge) என்பவரால் இந்த குழு மூளைச்சலவை செய்யப்பட்டுள்ளதாக போலீசார், தெரிவித்துள்ளனர். மிகப்பெரிய அழிவு சாபத்தை தவிர்க்கவும், விரைவாக பரலோகம் நுழைந்து இயேசுவை சந்திக்கவும் தங்களை பட்டினி கிடக்கும்படி மக்கென்சி என்தெங்கே அறிவுறுத்தியதாக உண்ணாவிரதம் கடைபிடித்த ஒருவர் தெரிவித்துள்ளார். போதகர் மக்கென்சி என்தெங்கே கடந்த மாதம் 2 குழந்தைகளின் மரணம் தொடர்பாக கைது செய்யப்பட்டு, பின் ஜாமீனில் வெளியே விடுவிக்கப்பட்டார். உயிரிழந்த குழந்தைகளின் பெற்றோர் போதகர் மக்கென்சி என்தெங்கே-வை பின்பற்றுபவர்களில் உள்ளனர். குழந்தைகளை இழப்பது மூலம் நீங்கள் ஹீரோவாக மாறுவீர்கள் என போதகர் என்தெங்கே பெற்றோரிடம் கூறியதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.

Chella

Next Post

கியூஆர் கோடு மூலம் பொதுமக்களிடம் பணம் வசூல் செய்யும் பூம் பூம் மாட்டுக்காரர்..!! வைரலாகும் வீடியோ..!!

Mon Apr 17 , 2023
நாடு முழுவதும் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை அதிகரித்துவிட்டது. சிறிய பெட்டிக்கடைகள் முதல் பெரிய பெரிய வணிக வளாகங்கள் வரை அனைத்து இடங்களிலும் பேடி எம், கூகுள் பே, போன் பே போன்ற டிஜிட்டல் செயலிகள் மூலம் பணபரிவர்த்தனை நடைபெற்று வருகிறது. தற்போது அனைவரும் இந்த பழக்கத்திலிருந்து மாறிவிட்டது என்பது இயல்பான ஒன்று தான். ஆனால் கர்நாடகவைச் சேர்ந்த பூம்பூம் மாட்டுக்காரர் ஒருவர், தன்னுடைய காளையின் தலையில் க்யூர் கோட் வைத்து பணம் […]

You May Like