ஒருவரின் ராசி மற்றும் நட்சத்திரங்கள் அவர்கள் பிறந்த முகத்தைப் பொறுத்து அமைகிறது. சில ராசிக்காரர்கள் நட்சத்திரங்கள் மற்றும் கிரகணங்களின் அடிப்படையில் அதிர்ஷ்டக்காரர்களாக இருப்பார்கள் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அவர்கள் தங்களுக்கு மட்டும் அதிர்ஷ்டத்தோடு இல்லாமல் தங்களது வாழ்க்கை துணைக்கும் அதிர்ஷ்ட தேவதைகளாக இருப்பார்கள் என ஜோதிட குறிப்புகள் தெரிவிக்கின்றன. அந்த வகையில் தங்களது கணவர்களுக்கு அதிர்ஷ்ட தேவதைகளாக இருக்கப் போகும் நான்கு ராசிக்காரர்களை பற்றி பார்ப்போம்.
தன்னிச்சையாக முடிவெடுக்கக் கூடிய மேஷ ராசி பெண்கள் இயற்கையாகவே தலைமை பண்பும் சுயமாக முடிவெடுக்கும் திறனும் பெற்றிருப்பார்கள். இவர்களது சுய உந்துதல் மற்றும் அச்சமின்மை இவர்களது கணவன்மார்களுக்கு அதிர்ஷ்டத்தின் கதவை திறந்து வைக்கும். ரிஷப ராசி பெண்கள் எதார்த்தத்தை அதிகம் விரும்புவோர்களாக இருப்பார்கள். ரிஷப ராசி கொண்ட மனைவியை பெற்றவர்கள் வீட்டில் என்றும் செல்வம் செழிக்கும். அவர்கள் வீட்டை நிர்வாகித்து கணவர்களுக்கு எந்த தொந்தரவும் இல்லாமல் பார்த்துக் கொள்வார்கள். இந்த ராசி பெண்களை மனைவிகளாக அடைந்தவர்கள் அதிர்ஷ்டசாலிகள்.
சந்திரனின் ஆசி பெற்ற கடக ராசி பெண்கள் தங்கள் துணைக்கு காதலோடு பாதுகாப்பு உணர்வையும் தருபவர்களாக இருப்பார்கள். இவர்கள் தங்கள் உள்ளுணர்வுகளின் அடிப்படையில் எடுக்கும் முடிவுகள் குடும்பத்திற்கு அதிர்ஷ்ட கதவை திறக்கும். இவர்கள் தங்களது துணை மற்றும் குடும்பத்தினை பாதுகாக்கும் உள்ளார்ந்த திறனையும் பெற்றவர்களாக இருப்பார்கள். துலாம் ராசி பெண்கள் அன்பின் உருவாக இருப்பார்கள். இவர்களின் புத்தி கூர்மையும் ராஜதந்திரமும் அவர்களது கணவன் முன்னேற்றத்திற்கு கைகொடுக்கும். இவர்கள் தங்களது வாழ்க்கை துணைக்கு அன்பையும் பண்பையும் சமநிலையில் பரிமாறி திருமண பந்தத்தை பலப்படுத்துவதில் கெட்டிக்காரர்கள். இந்த நான்கு ராசி கொண்ட பெண்களையும் மனைவியாக அடைந்தவர்களுக்கு அதிர்ஷ்டம் தான்.