மேற்கு வங்க மாநிலம் குல்தாலியின் காசிர் ஹாட்டில் வசிக்கும் அப்துல் ஹுசைன் ஷேக் (31) என்பவருடன் மஃபுசா பியாதாய் என்பவருக்கு கள்ளக்காதல் இருந்து வந்துள்ளது. பியாதாயின் கணவர் தோயிப் அலி வேலைக்காக கொல்கத்தா சென்றிருந்தார். அப்போது இருவருக்கும் இடையிலான சந்திப்பு ஆரம்பமானது. கடந்த 21ஆம் தேதி, மஃபுசாவும் அப்துல்லாவும் திருமணம் செய்து கொள்வதற்காக குழந்தையை விட்டுவிட்டு ஓடிவிட திட்டமிட்டனர். ஆனால், குழந்தையை தன்னுடன் அழைத்துச் செல்ல அப்துல் மறுத்துள்ளார். இதனால், வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தையை இருவரும் அடித்துக் கொலை செய்துள்ளனர். மேலும், இருவரும் குழந்தையை மிகக் கொடூரமாகத் தாக்கியதாகவும், அதன் காரணமாகவே அவர் உயிரிழந்ததாகவும் குழந்தையின் மாமா அபு சித்திக் கூறினார். இதையடுத்து, போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து, பாருய்பூர் மாவட்டத்தின் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மசூத் ஹசன் கூறுகையில், குழந்தையை கடுமையாக தாக்கியுள்ளதால், உடலில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளன. தற்போது குழந்தை இறந்ததற்கான சூழ்நிலை குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் தற்போது தலைமறைவாக உள்ளனர். குழந்தையின் சடலம் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு, முதற்கட்ட அறிக்கைக்காக போலீசார் காத்திருக்கின்றனர். மேலும், பாருய்பூர் காவல் நிலையத்தில் முறைப்படி புகார் அளிக்குமாறு குழந்தையின் தந்தைக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.