IIFA விருதுகள் வழங்கும் நேற்று ஜெய்ப்பூரில் நடைபெற்றது. பாலிவுட் பிரபலங்கள் பலர் கலந்து கொண்ட இந்த விழாவில் பல்வேறு பிரிவுகளின் கீழ் திரைப்பட விருதுகள் வழங்கப்பட்டன. இந்த விழாவில் லாப்பட்டா லேடீஸ் மிகப்பெரிய வெற்றியாளராக உருவெடுத்தது. கிரண் ராவ் திரைப்படம் 10 விருதுகளை வென்றது. கார்த்திக் ஆர்யனும் பல விருதுகளை வென்றார்.
IIFA விருதுகள் வெற்றி பெற்றவர்களின் முழு பட்டியல்
சிறந்த படம் – லாப்படா லேடீஸ்
சிறந்த நடிகர் – கார்த்திக் ஆர்யன் (பூல் புலையா 3)
சிறந்த நடிகை – நிதான்ஷி கோயல் (லாப்பட்டா லேடீஸ்)
சிறந்த இயக்கம் – கிரண் ராவ் (லாப்பட்டா லேடீஸ்)
சிறந்த வில்லன் நடிகர் – ராகவ் ஜூயல் (கில்)
சிறந்த துணை நடிகை – ஜான்கி போடிவாலா (ஷைத்தான்)
சிறந்த துணை நடிகர் – ரவி கிஷன் (லாபட்டா லேடீஸ்)
சிறந்த கதை (ஒரிஜினில ) பிரபலமான பிரிவில் – பிப்லாப் கோஸ்வாமி (லாப்பட்டா லேடீஸ்)
சிறந்த கதை (தழுவல்) – ஸ்ரீராம் ராகவன், அரிஜித் பிஸ்வாஸ், பூஜா லதா சுர்தி, மற்றும் அனுக்ரிதி பாண்டே (மெர்ரி கிறிஸ்துமஸ்)
சிறந்த அறிமுக இயக்குனர் மானவர் – குணால் கெம்மு (மட்கான் எக்ஸ்பிரஸ்)
சிறந்த அறிமுக நடிகர் – லக்ஷ்யா லால்வானி (கில்)
சிறந்த அறிமுக நடிகை – பிரதிபா ரந்தா (லாப்பட்டா லேடீஸ்)
சிறந்த இசையமைப்பாளர் – ராம் சம்பத் (லாப்பட்டா லேடீஸ்)
சிறந்த பாடல் வரிகள் – பிரசாந்த் பாண்டே (லாப்பட்டா லேடீஸ் படத்தின் சஜ்னி பாடல் )
சிறந்த பாடகர் ஜூபின் நௌடியல் (ஆர்ட்டிக்கிள் 370 – துவா)
சிறந்த பாடகி – ஸ்ரேயா கோஷல் (அமி ஜெ தோமர் 3.0, பூல் புலையா 3)
சிறந்த ஒலி வடிவமைப்பு – சுபாஷ் சாஹூ, போலாய் குமார் டோலோய், ராகுல் கார்பே (கில்)
சிறந்த திரைக்கதை – சினேகா தேசாய் (லாப்பட்டா லேடீஸ்)
சிறந்த உரையாடல் – அர்ஜுன் தவான், ஆதித்யா தார், ஆதித்யா சுஹாஸ் ஜம்பலே, மோனல் தாக்கர் (பிரிவு 370)
சிறந்த எடிட்டிங் – ஜபீன் மெர்ச்சன்ட் (லாப்பட்டா லேடீஸ் )
சிறந்த ஒளிப்பதிவு – ரஃபே மஹ்மூத் (கில்)
சிறந்த நடன அமைப்பு – போஸ்கோ-சீசர் (பேட் நியூஸ் படத்தின் தௌபா தௌபா பாடல்)
சிறந்த ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் – ரெட் சில்லிஸ் VFX (பூல் புலையா 3)
இந்திய சினிமாவில் சிறந்த சாதனை – ராகேஷ் ரோஷன்
2025 ஆம் ஆண்டுக்கான IIFA விருதுகள்
2025 ஆம் ஆண்டுக்கான IIFA விழா மார்ச் 8 ஆம் தேதி ஜெய்ப்பூரில் தொடங்கி மார்ச் 9 ஆம் தேதி நிறைவடைந்தது. விருது வழங்கும் விழாவில் கரீனா கபூர் கான் தனது தாத்தா, புகழ்பெற்ற திரைப்பட தயாரிப்பாளர் ராஜ் கபூருக்கு அஞ்சலி செலுத்தினார்; ஷாருக்கான், மாதுரி தீட்சித், நோரா ஃபதேஹி உள்ளிட்ட பலர் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.
Read More : கண்ணப்பா படத்தில் பிரபாஸ் சம்பளமே வாங்காமல் நடித்தாரா..? உண்மையை உடைத்த பிரபல நடிகர்..