fbpx

GATE Result 2025 : கேட் தேர்வு முடிவுகள் வெளியானது.. நேரடியாக பார்க்க லிங்க் இதோ..!!

முதுகலை பொறியியல் படிப்புகளில் சேருவதற்கு நுழைவுத் தேர்வான கேட் தேர்வு 2025 முடிவுகள் இன்று  வெளியானது. மாணவர்கள் https://goaps.iitr.ac.in/login என்ற இணையதளம் மூலம் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

ஐஐடி உள்ளிட்ட மத்திய அரசின் தலைசிறந்த உயர்க்கல்வி நிறுவனங்களில் முதுகலை பொறியியல், அறிவியல் (ME, M. Tech, MS) படிப்புகளில் சேருவதற்கு கேட் நுழைவுத் தேர்வு (Graduate Aptitude Test in Engineering) நடத்தப்படுகிறது. ஆண்டிற்கு ஒரு முறை இத்தேர்வு ஐஐடி மூலம் நடத்தப்படும். இந்நிலையில், 2025ஆம் ஆண்டிற்கான கேட் தேர்வு, ரூர்க்கி இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனம் (IIT Roorkee) மூலம் நடத்தப்பட்டது.

பிப்ரவரி 1, 2, 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் 30 தேர்வு தாள்கள் கொண்டு இத்தேர்வு நடத்தப்பட்டது. 1 தேர்வர் 2 தாள்கள் வரை எழுத முடியும். பல தேர்வுக் கேள்விகள் (MCQ), பல தேர்ந்தெடுக்கப்பட்ட கேள்விகள் (MSQ) மற்றும் எண்ணியல் பதில் வகை (NAT) கேள்விகள் என 3 கட்ட வகையான கேளவிகள் கொண்டு மொத்தம் 3 மணி நேரத்திற்கு தேர்வு நடைபெற்றது. இந்த நிலையில்,  கேட் நுழைவுத் தேர்வு முடிவுகளை ஐஐடி ரூர்க்கி வெளியிட்டுள்ளது.

தேர்வு முடிவுகளை எப்படி அறிந்து கொள்வது..?

Step 1 : GATE 2025 இன் அதிகாரப்பூர்வ வலைத்தளமான gate2025.iitr.ac.in ஐப் பார்வையிடவும்.

Step 2 : முகப்புப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள GATE 2025 முடிவு இணைப்பைக் கிளிக் செய்யவும்.

Step 3 : இப்போது பதிவு எண், கடவுச்சொல் மற்றும் பிற விவரங்களை உள்ளீட வேண்டும்.

Step 4 : இதன்பிறகு தேர்வு முடிவுகள் தோன்றும். அதனை சரிபார்த்து தேர்வு முடிவு நகலை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.

மேலும், கேட் தேர்வு முடிவுகளின் மதிப்பெண் அட்டைகள் 2025 மார்ச் 28ஆம் தேதி வெளியாகும் என்று ஐஐடி ரூர்க்கி தெரிவித்துள்ளது. மதிப்பெண் அட்டையை 2025 மார்ச் 31ஆம் தேதி வரை மாணவர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும். இதற்காக ஒவ்வொரு தாளுக்கும் ரூ.500 செலுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.

Read more: கல்லூரி பேராசிரியைக்கு பாலியல் டார்ச்சர்..!! பேராசிரியரை ரவுண்டு கட்டிய மாணவர்கள்..!! புரட்டி எடுத்து போலீசில் ஒப்படைத்த பரபரப்பு சம்பவம்..!!

English Summary

IIT Roorkee has released the results of the GATE entrance exam.

Next Post

நடிகை அமலாபாலை எச்சரித்த ரஜினிகாந்த்.. தனுஷ்-ஐஸ்வர்யா விவாகரத்துக்கு அவர் தான் காரணமா..? - உண்மையை உடைத்த பிரபலம்

Wed Mar 19 , 2025
Rajinikanth's warning to Amala Paul?.. Is she the reason for Dhanush's divorce?

You May Like