இந்திய தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜீவ் குமாரின் பதவிக்காலம் நேற்றுடன் முடிவடைந்த நிலையில்… புதிய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் இன்று பதவி ஏற்றார். ஞானேஷின் பதவிக் காலத்தில் நாட்டில் பல முக்கியத் தேர்தல்கள் நடைபெறும். 2025 பீகார் சட்டமன்றத் தேர்தல்களும், 2026 மேற்கு வங்கம், அசாம் மற்றும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்களும் அவரது மேற்பார்வையின் கீழ் நடைபெறும். ஞானேஷ் ஜனவரி 29, 2029 வரை இந்திய தலைமைத் தேர்தல் ஆணையராகத் தொடர்வார்.
யார் இவர்? ஞானேஷ் குமார் உத்தரபிரதேசத்தின் ஆக்ரா மாவட்டத்தில் ஜனவரி 27, 1964 அன்று பிறந்தார். அவர் சிறுவயதிலிருந்தே நல்ல, விடாமுயற்சியுள்ள மாணவராக இருந்தார்… அதனால்தான் அவருக்கு மதிப்புமிக்க ஐஐடியில் இடம் கிடைத்தது. அவர் ஐஐடி கான்பூரில் சிவில் இன்ஜினியரிங்கில் பி.டெக் முடித்தார். அவர் இந்திய பட்டய நிதி பகுப்பாய்வு நிறுவனத்தில் (ICFAI) வணிக நிதியியல் பட்டம் பெற்றார். பின்னர் அவர் சர்வதேச அளவில் சிறந்த பல்கலைக்கழகங்களில் ஒன்றான ஹார்வர்டில் சுற்றுச்சூழல் பொருளாதாரம் பயின்றார்.
ஞானேஷ் குமார் 1988 ஆம் ஆண்டு கேரள கேடர் ஐஏஎஸ் அதிகாரி ஆவார். அவர் மார்ச் 2023 இல் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டார். முன்னதாக, ஞானேஷ் குமார் மத்திய உள்துறை அமைச்சகத்தில் பல முக்கிய பதவிகளை வகித்தார். உள் துறை கூடுதல் செயலாளராக இருந்த போது 2019 ஆம் ஆண்டில் ஜம்மு-காஷ்மீரில் 370 வது பிரிவை ரத்து செய்யும் மசோதா வரைவை உருவாக்குவதற்கு முக்கிய பங்காற்றியவர்.
ராம ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை அமைப்பதில் ஈடுபட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அமித் ஷாவின் நெருங்கிய உதவியாளராக அறியப்பட்ட ஞானேஷ் குமார், கூட்டுறவுத் துறையின் செயலாளராகப் பணியாற்றினார். 2024 மார்ச் 14ம் தேதி ஞானேஷ் குமார் தேர்தல் ஆணையராக நியமனம் செய்யப்பட்ட நிலையில், அடுத்த 11 மாதங்களில் தலைமை தேர்தல் ஆணையர் பதவிக்கு வந்துள்ளார்.
தனது பதவிக் காலத்தில் 20 மாநில சட்டமன்றத் தேர்தல்கள், குடியரசுத் தலைவர் மற்றும் குடியரசு துணைத் தலைவர் தேர்தல்கள், 2029 மக்களவைத் தேர்தலுக்கான முன் ஏற்பாடு பணிகளை கவனிப்பார். தற்போது 61 வயதாகும் ஞானேஷ் குமார், 2029ம் ஆண்டு ஜனவரி 26ம் தேதி வரை தலைமை தேர்தல் ஆணையராக நீடிப்பார்.
Read more :“செல்போன் இல்லாமல் உயிரோட இருக்க மாட்டேன்” செல்போனால் துடிதுடித்து உயிரிழந்த அண்ணன் – தங்கை..