fbpx

“இதனால் தான், நான் என் குழந்தைகளைக் கவனிக்காமல் விட்டுவிட்டேன்”; இளையராஜா பதிவிட்ட உருக்கமான பதிவு..

இசையமைப்பாளர் இளையராஜாவின் மகள் பவதாரிணி மறைந்த தினமான இன்று, இளையராஜா பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

புற்றுநோய் காரணமாக கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் பிரபல பாடகியும் இளையராஜாவின் மகளுமான பவதாரணி இலங்கையில் உயிரிழந்தார். அவரது மறைவு திரைத்துறையினரை மட்டுமில்லாமல் இசையை நேசிக்கும் அனைத்து தரப்பினரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. தன்னுடைய அழகு கொஞ்சும் குரலால் பல வெற்றிப்பாடல்களை பாடியுள்ள பவதாரணி, கார்த்திக் ராஜா, யுவன் ஷங்கர் ராஜா ஆகியோரது இசையில் பாடி வந்தார். பின்னர், அவர் இசையமைப்பாளராகவும் களமிறங்கினார். இவர் தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, கன்னடம், இந்தி மொழி படங்களிலும் இசையமைத்துள்ளார்.

இன்றுடன் அவர் மறைந்து ஓராண்டு நிறைவடைந்த நிலையில், இசையமைப்பாளர் இளையராஜா தனது மகளுக்காக ஆடியோ பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அதில், அவர் கூறும் போது “என் அருமை மகள் எங்களை விட்டு பிரிந்த நாள். அன்பே உருவான இந்த மகள் பிரிந்த பிறகு தான் அந்தக் குழந்தை எவ்வளவு அன்பு மையமாக இருந்திருக்கிறாள் என்று எனக்குப் புரிந்தது. காரணம், என்னுடைய கவனமெல்லாம் இசையிலேயே இருந்ததால் என் குழந்தைகளைக் கவனிக்காமல் விட்டுவிட்டேன். அது இப்போது வேதனையாக உள்ளது.

ஆனால் அந்த வேதனையெல்லாம் மக்களை ஆறுதல்படுத்தும் இசையாக இருக்கிறது. அதனால் எனக்கு கொஞ்சம் ஆறுதலாக இருக்கிறது. பவதாரனியின் பிறந்த நாளான பிப். 12 ஆம் தேதி, அவருக்கு திதி என்பதால் நினைவு நாள் நிகழ்ச்சியாக நடத்தலாம் என்ற எண்ணம் உள்ளது. அதனால் அனைத்து இசைக்கலைஞர்களும் அந்த நிகழ்வில் கலந்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” எனப் பதிவிட்டு இருந்தார்.

Read more: “என்னால் எனது கணவருக்கு சங்கடம் தான்” வைரலாகும் கீர்த்தி சுரேஷின் பேட்டி..

English Summary

ilaiyaraja posted an audio for the demise of his daughter

Next Post

"என்கூட மட்டும் இல்ல, என்னோட நண்பர்கள் கூடவும் நீ உல்லாசமா இருக்கணும்" 55 வயது நபரால் பெண்ணிற்கு நேர்ந்த சோகம்..

Sat Jan 25 , 2025
55 years old man sexually abused her friends wife

You May Like