இளையராஜாவின் மகளும் பிரபல பாடகியுமான பவதாரிணி உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.
இசைஞானி இளையராஜாவின் மகளும் பிரபல பின்னணி பாடகியுமான பவதாரிணி (47) உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். புற்றுநோய்க்கு கடந்த 5 மாதங்களாக பவதாரிணி சிகிச்சை பெற்று வந்த நிலையில், சமீபத்தில் ஆயுர்வேத சிகிச்சைக்காக அவர் இலங்கை சென்றுள்ளார். ஆனால், சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை மாலை 5.20 மணியளவில் பவதாரிணி காலமானார்.
இந்நிலையில், மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள மகளின் உடலை பார்த்து இசைஞானி இளையராஜா கதறி அழுதார். இதனையடுத்து, அவரது உடலை தனி விமானத்தில் கொண்டுவர ஏற்பாடு நடந்து வருகிறது. இன்று காலை 10 மணிக்கு உடல் சென்னைக்கு கொண்டுவரப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது. பொதுமக்கள், உறவினர்கள், திரைத்துறையினர் அஞ்சலி செலுத்தவுள்ளனர்.