fbpx

‘என் துணைக்கு நீ தான்.. உன் துணைக்கு நான் தான்’ மொரிஷியஸில் தனியாக ஜில் செய்யும் இளையராஜா!

மொரிஷியஸில் தான் தனியாக இருக்கும் புகைப்படத்தை இசையமைப்பாளர் இளையராஜா பகிர்ந்துள்ளார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் அவரது 171ஆவது படமான ‘கூலி’ படத்தின் டீசர் வெளியானது. ‘கூலி’ படத்தின் டைட்டில் டீசரில் தன்னுடைய பாடலை தனது அனுமதி பெறாமல் பயன்படுத்தியுள்ளதாக சன் பிக்சர்ஸ் நிறுவனத்துக்கு எதிராக இளையராஜா நோட்டீஸ் அனுப்பினார். தமிழ்நாட்டில் இளையராஜா பற்றிய விவாதங்கள் பற்றி எரிந்துக் கொண்டிருக்கின்றன.

இவ்விவகாரம் சூடுபிடித்து ஓடிக்கொண்டிருக்க, மொரிஷியஸ் தீவில் தான் தனிமையில் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து இருக்கிறார் இசையமைப்பாளர் இளையராஜா. மொரிஷியஸ் தீவில் சுற்றுலா சென்றுள்ள இளையராஜா அங்கே ஒரு பீச் குடிலுக்கு அருகே ஸ்டோன் பெஞ்சில் அமர்ந்துக் கொண்டிருக்கும் லாங் ஷாட் போட்டோவை இளையராஜா தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

தற்போது இது வைரல் ஆகியுள்ளது. இது  இளையராஜா தனிமையில் தவிப்பதனை சுட்டிக்காட்டுவதாக அவரது ரசிகர்கள் சமூகவலைதளங்களில் கமெண்ட் இட்டு வருகின்றனர். மேலும் மகள் பவதாரிணியின் மரணத்துக்குப் பின், இளையராஜா யாரிடமும் அதிகம் பேசிக்கொள்வதில்லை எனவும்; தனிமையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.  

Next Post

25 ஆண்டுகளுக்குப் பிறகு இணைந்த கூட்டணி ; ரசிகர்கள் உற்சாகம்!

Thu May 2 , 2024
நடிகர் பிரபுதேவா- ரஹ்மான் இருவரும் 25 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைந்திருக்கும் புதிய படத்தின் படப்பிடிப்புத் தொடங்கியுள்ளது. பிரபுதேவா தற்போது விஜய் – வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகும் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். கேரளாவில் தற்போது படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், பிரபுதேவா ஹீரோவாக நடிக்கும் புதுப் படத்தின் படபிடிப்பு தொடங்கியுள்ளது. மனோஜ் என்.எஸ். இயக்கத்தில் உருவாகும் […]

You May Like