Shakib Al Hasan: சட்டவிரோத நடவடிக்கை காரணமாக பங்களாதேஷ் ஆல்-ரவுண்டர் ஷகிப் அல் ஹசனுக்கு அனைத்து போட்டிகளிலும் பந்து வீச தடை விதித்து இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் (ECB) உத்தரவிட்டுள்ளது.
டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற வங்காளதேச அணியின் நட்சத்திர ஆல்-ரவுண்டர் ஷகிப் அல் ஹசன், செப்டம்பரில் நடந்த கவுண்டி சாம்பியன்ஷிப்பில் சர்ரே அணிக்காக விளையாடிய போது, கள நடுவர்கள் ஸ்டீவ் ஓ’ஷாக்னெஸ்ஸி மற்றும் டேவிட் மில்ன்ஸ் ஆகியோரால் அவரது பந்துவீச்சு நடவடிக்கை புகார் அளிக்கப்பட்டது. அதாவது, அனுமதிக்கப்பட்ட முழங்கை நீட்டிப்பு 15 டிகிரியை தாண்டி பந்துவீசியதாக புகார் அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, இந்த மாத தொடக்கத்தில் லஃபரோ பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட ஒரு சுயாதீன சோதனை, அவரது நடவடிக்கை சட்டவிரோதமானது என்பதை உறுதிப்படுத்தியது, மேலும் அவர் இடைநீக்கத்தை நீக்க மறுமதிப்பீடு செய்ய வேண்டும் என்று அறிக்கை கூறியது.
ஷாகிப் செப்டம்பர் மாதம் சோமர்செட்டுக்கு எதிரான அந்த போட்டியில் டான்டனில் சர்ரே அணிக்காக ஒன்பது விக்கெட்டுகளை வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. வங்கதேச அணிக்காக 71 டெஸ்ட் போட்டிகளில் 4609 ரன்கள் மற்றும் 246 விக்கெட்டுகளையும், 247 ஒருநாள் போட்டிகளில் 7570 ரன்கள் மற்றும் 317 விக்கெட்டுகளையும், 129 டி20 போட்டிகளில் 2551 ரன்கள் மற்றும் 149 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.